Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் - சாரா இடையே பிரேக் அப்? இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவம்.. இழுத்துவிட்ட டேனி மாரிசன்!

மும்பை: குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இருவரும் பின்தொடர்வதை நிறுத்தி இருப்பதால், ரசிகர்களிடையே மீண்டும் இது விவாதமாகி இருக்கிறது.

இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்தே அவர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் செய்த சேட்டையால், இந்த விவகாரம் வெட்ட வெளிச்சமாகியது. இதனைத் தொடர்ந்து ஜியோ விழா ஒன்றில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இணைந்து பங்கேற்றனர்.

Shubman Gill and Sara Tendulkar unfollowed each other in Instagram sparks a debate amoung fans during IPL 2025

அதேபோல் காதலர் தினத்தன்று ஒரே ரெஸ்டாரெண்டில் இருவரும் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சோசியல் மீடியாவுக்கு தீனி போட்டனர். அதேபோல் பஞ்சாபி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சாரா டெண்டுல்கரை டேட்டிங் செய்து வருவதையும் சுப்மன் கில் ஒப்புக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் சகோதரியுடன் சாரா டெண்டுல்கர் நெருக்கம் காட்டி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையின் போது அமெரிக்க தெருக்களில் சுப்மன் கில் - சாரா இருவரும் சுற்றி திரிந்தனர். இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கர் மாடலிங் மற்றும் தனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் தொண்டு நிறுவன பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார். அதேபோல் சுப்மன் கில்லும் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் இருந்ததால், கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடந்த கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் டாஸ் போடும் போது வர்ணனையாளர் டேனி மாரிசன், அழகாக இருக்கிறாய்.. விரைவில் திருமணம் நடக்கப் போகிறதா என்று ஜாலியாக கேள்வி எழுப்பினார். இதனால் வெட்கப்பட்ட சுப்மன் கில், அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் சுப்மன் கில்லின் உறவு விவாதமாகி இருக்கிறது.

தற்போது இன்ஸ்டாகிராமில் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் கில் மற்றும் சாரா இடையே பிரேக் அப் ஆனதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இதுவெறும் சுப்மன் கில்லுக்கான பிஆர் நடவடிக்கை என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். சுப்மன் கில்லை அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவாக்க பிசிசிஐ இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 22, 2025, 12:12 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+