Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடியவர்; இன்று வெளுத்து வாங்குவார்'.. இளம் இந்திய வீரரை கணித்த பிரையன் லாரா!

துபாய்: சுப்மான் கில் துரதிர்ஷ்டவசமானவர். அவர் திறமையான வீரர். பெரிய ஸ்கோர் அடிக்க கூடியவர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறி இருக்கிறார். ஐ.பி.எல்.லில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிக்கும் இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா? சாவா? ஆட்டமாகும். இந்த ஐ.பி.எல் சீசனில் தொடக்கத்தில் சொதப்பிய கொல்கத்தா திடீரென எழுச்சி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குறிப்பாக ஐக்கிய அரசு அமீரகத்தில் கடைசி 4 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்துள்ளது. புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள டெல்லி, பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இன்றைய போட்டியில் மட்டுமில்லாது வரும் போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் டாப் பார்மில் உள்ளனர். பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி மிரட்டுகிறார். தொடக்க வீரர் சுப்மான் கில் இன்னும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்

பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டியதுதான். கே.எல்.ராகுல், நிகோலஸ் பூரன், மயங்க் அகர்வால், ஷமி போன்ற தரமான வீரர்கள் இருந்தும் சரியான திறமையை வெளிப்படுத்தாததால் பஞ்சாப் கிங்ஸ் இந்த நிலைமையில் வந்து நிற்கிறது. மயங்க் அகர்வால் காயம், நிகோலஸ் பூரன் அவுட் ஆப் பார்ம், ராகுல் தொடர்ச்சியாக நன்றாக விளையாடாதது பஞ்சாப் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. கிறிஸ் கெயிலும் மீதமுள்ள போட்டியில் இருந்து விலகி இருப்பது கூடுதல் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது.

சுப்மான் கில்

சுப்மான் கில்

இந்த நிலையில் இன்றைய மேட்ச் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஜாம்பவான் பிரையன் லாரா கூறி இருப்பதாவது:- என்னை கேட்டால் சுப்மான் கில் சற்று துரதிர்ஷ்டவசமானவர். அவர் திறமையான வீரர். பெரிய ஸ்கோர் அடிக்க கூடியவர். அவர் பேட் செய்யும் விதத்தை பார்த்தால், அவர் பார்மில் இருப்பது புரியும். அவர் பெரிய ஸ்கோருக்கு ஒரு போட்டி தொலைவில்தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் வெங்கடேஷ் ஐயருடன் ஒன்றாக வந்து சிறப்பான ஸ்கோர் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.

நிக்கோலஸ் பூரன் சொதப்பல்

நிக்கோலஸ் பூரன் சொதப்பல்

பஞ்சாப் கிங்ஸ்சை பொறுத்தவரை அவர்களிடம் நல்ல திறன் உள்ளது. ஆனால் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை. அவர்கள் தற்போது பெரிய கிரிக்கெட் விளையாடுவதில்லை. அவர்களின் பேட்டிங் எப்போதும் பலமாக இருந்தது, ஆனால் அது இப்போது பேசும்படியாக இல்லை. நிக்கோலஸ் பூரன் மற்றும் கிறிஸ் கெய்ல் வாய்ப்புகளை தவற விட்டனர். கே.எல்.ராகுல், மயங்க் கூட தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்படுகிறார், முகமது ஷமி நன்றாக செயல்படுகிறார். பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் மீண்டும் கிளிக் செய்யப்பட வேண்டும். அதுதான் அவர்களுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்' என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.

Story first published: Friday, October 1, 2021, 23:00 [IST]
Other articles published on Oct 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+