Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகள் ரசிக்கும் ஷுப்மன் கில்.. தான் புகழ்ந்த ப்ரித்வி ஷா.. யார் பெஸ்ட்? - சச்சினுக்கு வந்த சோதனை!

மும்பை: அடுத்த 10 வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஓப்பனர்களில் ஒருவராக ஷுப்மன் கில் திகழ்வார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் புகழ்ந்துள்ளார்.

அதுசரி டைட்டில் மேட்டருக்கு வாங்க என்று நீங்க சொல்வது எனக்கு நல்லாவே கேட்குது..

வரேன்! அதுக்கு முன்னாடி பிராட் ஹாக் என்ன சொன்னாருன்னு-லைட்டா பார்த்திடலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தான் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் 259 ரன்கள் குவித்து, அணியில் தான் சேர்க்கப்பட்டதற்கு ஏகத்துக்கும் நியாயம் கற்பித்தார் ஷுப்மன். அதுவும், முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்டெம்புக்கும், தனது கால்களுக்கும் இடையேயான 'பாகுபலி' பிரம்மாண்ட இடைவெளியில் ஸ்டெம்ப்புகள் தெறிக்க அவுட்டாகி தலையை தொங்கப்போட்டு வெளியேறிய ப்ரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கிடைத்த அந்த வாய்ப்பில் ஷுப்மன் கில் இப்படியாக தனது வலிமையை நிரூபித்து இருக்கிறார்.

அதுவும், பிரிஸ்பேனில் அவர் அடித்த மேட்ச் வின்னிங் 91 ரன்கள் எல்லாம் 'வெல்டன் கில்' ரகம்.

 உலகின் பெஸ்ட் ஓப்பனர்

உலகின் பெஸ்ட் ஓப்பனர்

இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் ஆஸி., ஸ்பின்னர் பிராட் ஹாக், 'கிரிக்கெட் புத்தகத்தில் உள்ள அத்தனை வித ஷாட்ஸ்களையும் அவர் ஆடுகிறார். ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸி., பவுலர்கள் அவரை ஷார்ட் பந்துகள் கொண்டு சோதித்த போது, அவற்றை ஹூக் ஷாட் மூலம் அவர் கையாண்ட விதம் என்னை இம்ப்ரெஸ் செய்துவிட்டது. அடுத்த பத்து 10 வருடங்களுக்கு உலகின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் ஓப்பனர்களில் ஒருவராக ஷுப்மன் கில் விளங்குவார்' என்று தனது மனதில் பட்டதை கொட்டித் தீர்த்துவிட்டார்.

 ப்ரித்வியை புகழ்ந்த சச்சின்

ப்ரித்வியை புகழ்ந்த சச்சின்

சரி! இப்போ சச்சின் மேட்டருக்கு வருவோம்.

'அவன் தான் எதிர்கால இந்தியா' என்று சச்சின் ஒரு வீரரைப் புகழ்ந்து நீங்க பார்த்து இருக்கீங்களா? யெஸ்... நம்ம ப்ரித்வி ஷா-வைத் தான் 12 வருடங்களுக்கு முன்பு சச்சின் இப்படி புகழ்ந்திருந்தார்.

அடிப்படையில், ப்ரித்வி ஷா மும்பையைச் சேர்ந்த வீரர். சிறுவனாக இருந்த போது, ப்ரித்வியின் பேட்டிங்கை பார்த்து வியந்த சச்சின், தனது நண்பரிடம் "அந்த சிறுவன் ஆடுவதைப் பார்த்தீர்களா? அவர் இந்தியாவின் எதிர்கால வீரர்" என்று கூறியுள்ளார்.

 டெக்னிக் இல்லா ப்ரித்வி

டெக்னிக் இல்லா ப்ரித்வி

ஆனால், ப்ரித்வியோ ஆஸி.,க்கு எதிரான தொடரில் சொதப்ப... சொதப்பியதைவிட அவர் அவுட்டான விதம்.. அப்பப்பா... இரு இன்னிங்ஸிலும் அவர் ஸ்டெம்ப்பை 'இந்தாடா கண்ணா...' என்று எதிரணி பேஸர்களிடம் கட்டி டர்ர்ர் ஆன விதம் தான் ரசிகர்கள் மட்டுமில்லாது தேர்வுக்குழுவினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

'போய் பேட்டிங் டெக்னிக்ஸ் வா கத்துக்கினு கண்ணு' என்று முதல் போட்டிக்கு பிறகு அவரை அனுப்பி வைத்துவிட்டார்கள். அடுத்து தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ப்ரித்வி பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

 ஷுப்மன் ரசிகை சாரா

ஷுப்மன் ரசிகை சாரா

ஆனால், மற்றொரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்கும் ஷுப்மன் கில்-லின் மிகத் தீவிரமான ரசிகையாக... அதுக்கும் மேல.... பக்தையாக... அதுக்கும் மேல... ஒரு நலம் விரும்பியாக அவரை என்கரேஜ் செய்துக் கொண்டே இருக்கிறார் சச்சினின் அன்பு மகள் சாரா.

ஏற்கனவே இருவரும் டேட்டிங் வரை சென்றுவிட்டதாக வட இந்திய மீடியாக்கள் செய்திகளை தட்டிவிட, ஷுப்மனின் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்தையும் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக பாராட்டி அவ்வப்போது தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார் சாரா.

இன்னும் சிலரோ, சச்சினின் மருமகன் ஷுப்மன் கில் என்று வெளிப்படையாகவே பேசுறாங்கன்னா பார்த்துக்கோங்க.

தான் பாராட்டிய, 'வருங்கால இந்தியா' என்றெல்லாம் ஹைப் கொடுத்த மும்பை மகனான ப்ரித்வி-யின் நிலைமை மோசமாக, மகள் நேசிக்கும் பஞ்சாப் சிங்கம் ஷுப்மன் கில்-லின் எகிறும் கிராஃப்பை பார்க்கும் சச்சின் எண்ண ஓட்டம் எப்படியாக இருக்கும் என்பதே அறிய பேராவலாக உள்ளது.

Story first published: Tuesday, February 2, 2021, 18:57 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+