For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில்லால் பாபர் அசாமின் நம்பர் 1 இடத்திற்கு ஆபத்து.. கில் இதை செய்தால் தெறிக்க விட்றலாம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்கால நட்சத்திரமாக தற்போது உருவெடுத்து வருகிறார். சுப்மன் கில் இவர் அண்டர் 19 கிரிக்கெட்டில் விராட் கோலி போல் காலடி எடுத்து வைத்தார்.

இந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பும் கில், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

Shubman gill vs Babar azam - Race for No 1 odi batsman scenario is here

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் கூட அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையும் கில் பெற்றார். இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் நம்பர் ஒன் வீரராக களம் காணப்போவது கில்லா இல்லை பாபர் அசாமா என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி தற்போது ஏற்பட்டு இருக்கிறது. ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் 814 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் கில் இருக்கிறார்.

உலகின் முன்னணி வீரரான பாபர் அசாம், ஆசிய கோப்பை தொடரில் நேபாளுக்கு எதிராக 151 ரன்கள் விளாசினாலும் அதன் பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் அவருடைய புள்ளிகள் தற்போது 857 வரை சரிந்து இருக்கிறது. எனினும் தொடர்ந்து அவர் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நம்பர் ஒன் வீரராக பாபர் அசாமை மாற்ற கில்லுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

உலகக்கோப்பை தொடர்க்கு முன்பு இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆனால் அதே சமயம் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அவர்கள் எந்த ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தற்போது விளையாடவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 200 ரன்களுக்கு மேல் மூன்று போட்டிகளையும் சேர்ந்து அடித்தால் அவர் பாபர அசாமை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவார்.

இதற்கு நல்ல வாய்ப்பு தற்போது ஏற்பட்டு இருக்கிறது. சச்சினை தவிர நம்பர் ஒன் வீரர் என்ற அந்தஸ்தில் எந்த இந்திய வீரரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடியதில்லை. தற்போது அந்தப் பெருமையை பெற கில்லுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இல்லாத நிலையில் கில் தான் அணியை காப்பாற்ற வேண்டிய நிலைமையில் இருக்கிறார்.

Story first published: Wednesday, September 20, 2023, 18:37 [IST]
Other articles published on Sep 20, 2023
English summary
Shubman gill vs Babar azam - Race for No 1 odi batsman scenario is here சுப்மன் கில்லால் பாபர் அசாமின் நம்பர் 1 இடத்திற்கு ஆபத்து.. கில் இதை செய்தால் தெறிக்க விட்றலாம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+