Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் vs விராட் கோலி vs சச்சின்: 37 டெஸ்ட் போட்டி முடிவில் அதிக ரன்கள், சதம் அடித்தது யார்?

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து எதிரான தொடரில் அவர் நான்கு சதம் உட்பட 754 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கின்றார். இதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக யாருமே செய்யாத சாதனையை அவர் படைத்திருக்கின்றார்.

ஒரு கேப்டனாக இன்னும் கில் பல விஷயங்களில் முன்னேற வேண்டும் என்றாலும் பேட்ஸ்மேனாக அவர் பட்டையை கிளப்பி இருக்கின்றார். இந்த நிலையில் சுப்மன் கில் 37 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கின்றார் இதே கட்டத்தில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

Shubman Gill vs Virat Kohli vs Sachin

கில் 37 டெஸ்ட் போட்டிகளில் 2647 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் அவருடைய சராசரி 41.35 என்று அளவில் இருக்கின்றது. இதே கட்டத்தில் விராட் கோலி 37 டெஸ்ட் போட்டிகளில் 2794 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது. இந்தக் கட்டத்தில் கில் மற்றும் விராட் கோலியை விட சச்சின் குறைவான ரன்களை தான் அடித்திருக்கிறார்.

சச்சின் 37 டெஸ்ட் போட்டிகளில் 2481 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் அவருடைய சராசரி இருவரையும் விட அதிகமாக இருந்தது. சச்சினின் சராசரி 52 என்ற அளவில் அப்போதைய கட்டத்தில் இருந்திருக்கின்றது. 37 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1346 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 537 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 324 ரன்களும், வங்கதேசத்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 321 ரன்களும் அடித்து இருந்திருக்கிறார்.

இதே கட்டத்தில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1226 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி 426 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 322 ரன்களும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 272 ரன்கள் அடித்திருக்கின்றார். இதே கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துக்கு எதிராக ஆறு டெஸ்ட் போட்டிகள் விளையாடி 542 ரன்கள் அடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 458 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடி 402 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 368 ரன்களும் குவித்திருக்கின்றார். சுப்மன் கில், 37 டெஸ்ட் போட்டியில் முடிவில் 9 சதம், 7 அரை சதம் அடித்துள்ளார். ஆனால் விராட் கோலி இதே கட்டத்தில் 11 சதம், 11 அரை சதம் என கில்லை விட அதிகம் அடித்து இருக்கின்றார்.

இதே கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 8 சதம், 13 அரை சதம் என அடித்துள்ளார். சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1268 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் அவருடைய சராசரி 42 ஆகும். இதில் நான்கு சதம் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் அடித்துள்ளார்.

இதே கட்டத்தில் விராட் கோலி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கில்லை விட அதிகமாக ரன்கள் அடித்திருக்கின்றார். கோலி, 1612 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 48 ஆகும். இதில் ஏழு சதமும், நான்கு அரை சதமும், கோலி அடுத்துள்ளார். இதே கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 16 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 986 ரன்கள் தான் அடித்து இருக்கின்றார். இதில் அவருடைய சராசரி 42 ஆகும். இது நான்கு சதமும், மூன்று அரை சதமும் அடங்கும். 37 டெஸ்ட் போட்டிகள் முடிவில் பார்த்தால் இந்த மூன்று வீரர்களில் விராட் கோலி தான் அதிகமாக அடித்து இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 18, 2025, 10:12 [IST]
Other articles published on Aug 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+