Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டுவென்டி 20 கிரிக்கெட்டை விடுங்கள்.. இளம் வீரர்களுக்கு சச்சினின் அட்வைஸ்!

மும்பை: சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் படைக்காத சாதனை இல்லை. ஆனால் டுவென்டி 20 கிரிக்கெட் பார்மட்டை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதைப் பிரதிபலிப்பது போல உள்ளது அவரது லேட்டஸ்ட் அறிவுரை.

இளம் வீரர்கள் டுவென்டி 20 கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் உத்திகளை காப்பியடித்து விளையாடக் கூடாது. மாறாக, அணிக்கு வெற்றி தேடித் தரும் வகையில் பார்ட்னர்ஷிப்களை ஏற்படுத்தும் வகையில் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றிருக்கும் மும்பை 16 வயதுக்குட்பட்டோருக்கான அணி வீரர்களிடையே சச்சின் உரையாடினார். அப்போதுதான் இந்த அறிவுரையை அவர் வழங்கினார்.

நல்ல கிரிக்கெட்டை ஆடுங்கள்

நல்ல கிரிக்கெட்டை ஆடுங்கள்

சச்சின் பேசுகையில், நல்ல கிரிக்கெட்டை கொடுக்க நீங்கள் முயல வேண்டும். கிரிக்கெட்டின் அடிப்படைகளை தெளிவாக தெரிந்து கொண்டு விளையாட வேண்டும்.

டுவென்டி 20 ஸ்டைல் வேண்டாம்

டுவென்டி 20 ஸ்டைல் வேண்டாம்

டுவன்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் உத்திகளை பின்பற்றாதீர்கள். அது அபாயகரானது. அடிப்படை தெரியாமல் அதை ஆடக் கூடாது.

பார்ட்னர்ஷிப் அவசியம்

பார்ட்னர்ஷிப் அவசியம்

நீங்கள் உங்களுக்காக ஆடுவதை விட அணியின் வெற்றிக்காக ஆடுவதுதான் முக்கியமானது. பார்ட்னர்ஷிப் முக்கியமானது. அதை மனதில் வைத்து ஆடுங்கள் என்று கூறினார் சச்சின்.

ஒரே ஒரு டுவென்டி 20தான்

ஒரே ஒரு டுவென்டி 20தான்

சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒரு நாள் உள்பட அனைத்துப் போட்டிகளிலும் அசத்தியுள்ளார். ஆனால் அவர் சர்வதேச அளவில் விளையாடியது ஒரே ஒரு டுவென்டி 20 போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006ல் நடந்த அப்போட்டியில் அவர் 10 ரன்களை எடுத்தார். ஒரு விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 3, 2016, 12:09 [IST]
Other articles published on Jan 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+