For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs GT - 2011ஆம் ஆண்டும் இதே மாதிரி தான் நடந்திருக்கு.. சிஎஸ்கேக்கு சாதகமாக வரலாறு.. இதை பாருங்க

அகமதாபாத் : ஐபிஎல் கோப்பை மீது கை வைக்கப் போவது தோனியா இல்லை ஹர்திக் பாண்டியாவா என்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலகக்கோப்பை பைனல் போட்டிக்கு நிகரான ஒரு கிரேஸ் ரசிகர்கள் இடம் இருப்பதை பார்க்க முடிகிறது.

இதனை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஐபிஎல் பைனலை தங்களது தியேட்டர் வளாகத்தில் நேரலை செய்ய இருக்கிறது.

similarities between 2011 and 2023 ipl playoff - History might suit csk

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அந்த அணியில் உள்ள பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் அகமதாபாத் மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டதே காரணம். ஆனால் சிஎஸ்கே இறுதிப்போட்டியில் விளையாடுவது இது பத்தாவது முறையாகும்.

கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது சிஎஸ்கேவுக்கு சாதகமாக ஒரு விஷயம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை நடைபெற்றது. அப்போது நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும் அந்தத் தொடரில் இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் முதலிடத்தில் இருந்த ஆர் சி பி அணியால் மும்பை அணி வெளியேற்றப்பட்டது.

similarities between 2011 and 2023 ipl playoff - History might suit csk

தற்போது இதே மாதிரி தான் 2023 ஆம் ஆண்டு நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. அதே உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கிறது. சிஎஸ்கே அதே மாதிரி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு போல் இரண்டாம் குவாலிபையரில் குஜராத் அணியால், மும்பை வெளியேற்றப்பட்டது.

இதனால் 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே வென்றது போல் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும் அன்றைய தினத்தில் யார் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்கிறார்களோ விக்கெட்டுகளை எடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

Story first published: Sunday, May 28, 2023, 12:51 [IST]
Other articles published on May 28, 2023
English summary
similarities between 2011 and 2023 ipl playoff - History might suits csk CSK vs GT - 2011ஆம் ஆண்டும் இதே மாதிரி தான் நடந்திருக்கு.. சிஎஸ்கேக்கு சாதகமாக வரலாறு.. இதை பாருங்க
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+