Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபரப்பான 2வது ஒருநாள் போட்டி- கடைசி ஓவரில் வெற்றியை பறித்த மே.இந்திய தீவுகள்!

விசாகப்பட்டினம்: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்தியா -மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று பிற்பகல் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் உனட்கட்டிற்குப் பதிலாக மோகித் சர்மா சேர்க்கப்பட்டார். தொடக்க வீரர்களாக சர்மா- தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

கோஹ்லி அரைசதம்

கோஹ்லி அரைசதம்

மோகித் சர்மா 12 ரன்னிலும், தவான் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்து கோஹ்லி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

99 ரன்களில் கோஹ்லி அதிர்ச்சி அவுட்

99 ரன்களில் கோஹ்லி அதிர்ச்சி அவுட்

யுவராஜ் 28 ரன்களிலும் ரெய்னா 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஆடிய கோஹ்லில் 99 ரன்னில் ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார்.

டோணி அதிரடி

டோணி அதிரடி

பின்னர் களமிறங்கிய கேப்டன் டோணி அதிரடியாக விளையாடி 51 ரன்களையும் அஸ்வின் 10 பந்தில் 19 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்தியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் எடுத்திருந்தது.

ராம்பால் அபார பந்துவீச்சு

ராம்பால் அபார பந்துவீச்சு

மேற்கிந்திய தீவுகள் அணியின் ராம்பால் 10 ஓவர்கள் வீசி 60 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடக்கத்தில் தடுமாறிய மே.இ. தீவுகள்

தொடக்கத்தில் தடுமாறிய மே.இ. தீவுகள்

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்லஸ், பொவெல் களம் இறங்கினார்கள். சார்லஸ் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய சாமுவேல்ஸ் 8 ரன்களில் அவுட் ஆனார்.

நிலைத்து ஆடிய பொவெல்- பிராவோ ஜோடி

நிலைத்து ஆடிய பொவெல்- பிராவோ ஜோடி

3வது விக்கெட்டுக்கு பொவெலுடன் ஜோடி சேர பிராவோ களம் இறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். பிராவோ 50 ரன்களிலும், போவெல் 59 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

பரபரப்பான கடைசி ஓவர்

பரபரப்பான கடைசி ஓவர்

6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சைமன்ஸ் மற்றும் சமி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். சைமன்ஸ் 62 ரன்னில் அவுட் ஆனார். இறுதி ஓவரில் 3 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது மேற்கிந்திய தீவுகள். இதனால் கடைசி ஓவர்கள் பரபரப்பாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் 49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் குமார், சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் சமி

ஆட்ட நாயகன் சமி

63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் சமிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Story first published: Monday, November 25, 2013, 9:40 [IST]
Other articles published on Nov 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+