
மோசம்
இன்று நடந்த ஆட்டத்திலும் இந்திய வீரர் சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறியுள்ளனர். அதோடு சிராஜை தொடர்ந்து வார்த்தைகளால் அச்சுறுத்தி வந்துள்ளனர். சிராஜ் தனது வருத்தத்தை முகத்தில் வெளிப்படையாக காட்டினார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரஹானேவிடம் சிராஜ் புகார் அளித்தார்.

வெளியேற்றப்பட்டனர்
இதையடுத்து ரஹானே நடுவர்களிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிராஜை இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கிய 6 ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பாதுகாவலர்கள் மூலம் இவர்கள் 6 பேரும் வெளியேற்றப்பட்டனர். இவர்களிடம் தற்போது முறையான விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

சிராஜ்
சிராஜ் இப்படி இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளான போது பெவிலியனில் இருந்த ரவி சாஸ்திரி கடும் கோபம் அடைந்துள்ளார். தனது கோபத்தை வெளிப்படையாக ஆஸ்திரேலிய காவலர்களிடம் ரவி சாஸ்திரி காட்டி இருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

முடியாது
முதலில் ஆஸ்திரேலிய ரசிகர்களை வெளியேற்றுவதற்கு காவலர்கள் தயக்கம் காட்டி உள்ளனர். அதன்பின் இந்திய அணியின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் களத்தில் இறங்கினார்கள். இவர்களும் உள்ளே வந்த பின் , ஆஸ்திரேலியா ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கோபம்
ரவி சாஸ்திரி கோபமாக கத்தியதாலும், இனவெறி தாக்குதல் நடத்தியவர்களை வெளியேற்றாமல் ஆட மாட்டோம் என்று ரஹானே கூறியதால் இந்த நடவடிக்கை உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் 6 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications