வெளிப்பட்ட ஆக்ரோஷம்.. பறந்த பவுன்சர்கள்..இனவெறி தாக்குதல்களுக்கு.. பவுலிங் மூலம் பதிலடி தந்த சிராஜ்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல்கள் அனைத்திற்கும் முகமது சிராஜ் தனது சிறப்பான பவுலிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. கடைசி டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
தற்போது வரை நடந்துள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மொத்தமாக இந்தியாவை விட 295 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

எப்படி
இந்த போட்டியில் இந்திய அணிக்காக முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். அதன்பின் இன்றைய போட்டியில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ளார்.

செம பவுலிங்
இதுவரை நடந்துள்ள ஆட்டத்தில் சிராஜ்தான் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். தொடர்ச்சியான இன் ஸ்விங் பந்துகள், பவுன்சர் பந்துகளை வீசி வருகிறார். இன்று சிராஜ் வீசிய பவுன்சர் பந்துகள்தான் ஆஸ்திரேலிய அணியை மொத்தமாக காலி செய்ய காரணமாக இருந்தது.

பவுன்சர் பந்துகள்
மார்னஸ், ஸ்மித், மேத்யூ வேட் என்று ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிராஜ்தான் இன்று காலி செய்தார். அதேபோல் டெயில்எண்டர்களில் அதிரடியாக ஆட கூடிய ஸ்டார்க் விக்கெட்டையும் இன்று சிராஜ்தான் வீழ்த்தினார்.

தாக்குதல்
இந்த டெஸ்ட் தொடரில் பல முறை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சிராஜ் மீது இன ரீதியான தாக்குதல்களை நடத்தினார்கள். இந்திய வீரர்களை குரங்கு என்று கூறி இன ரீதியாகவும், மதத்தை குறிப்பிட்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது டெஸ்ட்
முக்கியமாக மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர் சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறியுள்ளனர். அதோடு சிராஜை தொடர்ந்து வார்த்தைகளால் அச்சுறுத்தி வந்துள்ளனர். சிராஜ் தனது வருத்தத்தை முகத்தில் வெளிப்படையாக காட்டினார். இது ஐசிசி புகார் வரை சென்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு
தற்போது நடந்து வரும் 4வது டெஸ்டிலும் கூட சிராஜ் மீது இதேபோல் இன ரீதியான தாக்குதல்கள் நடந்தது. இந்த நிலையில் இந்த இனவெறி தாக்குதல்களுக்கு கோபமாக பதிலடி கொடுக்காமல் தனது ஆக்ரோஷமான ஆட்டம் மூலம் சிராஜ் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார். தனது கோபம் அனைத்தையும் ஆட்டம் பக்கம் திருப்பி சிறப்பாக பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications