சுற்றி நின்ற போலீஸ்.. பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட சிராஜ்.. விசாரணையை தொடங்கிய "மேலிடம்"!
சிட்னி; ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இன்றைய ஆட்டத்திற்கு பின் முகமது சிராஜ் மிகவும் பாதுகாப்பாக மைதானத்தை விட்டு அழைத்து செல்லப்பட்டார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கி வருகிறார்கள். மத ரீதியாகவும், இன ரீதியாகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்களை சீண்டி உள்ளனர்.

எப்படி
கடந்த மூன்று நாட்களாக இந்திய வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இப்படி விமர்சனம் செய்து வந்துள்ளனர். முக்கியமாக இந்திய வீரர்கள் சிராஜ், சைனி , பும்ரா மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி தாக்குதலை நடத்தி உள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video


புகார்
இது தொடர்பாக ஆட்டத்தின் இடையில் சிராஜ், ரஹானே இருவரும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 6 ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை பாதுகாவலர்கள் கைது செய்தனர். இவர்கள் தற்போது தனியாக வைக்கப்பட்டு உள்ளனர்.

மோசமான நிலை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இன்றைய ஆட்டத்திற்கு பின் முகமது சிராஜ் மிகவும் பாதுகாப்பாக மைதானத்தை விட்டு அழைத்து செல்லப்பட்டார். சிராஜுக்கு தனி பாதுகாவலர்கள் வைக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். இவரிடம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சொன்னது என்ன என்று பாதுகாவலர்கள் கேள்வி கேட்க உள்ளனர்.

சம்பவம்
சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவரிடம் விசாரிக்க உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளது. இந்த இனவெறி தாக்குதல் தொடர்பாக ஐசிசி தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது .


Click it and Unblock the Notifications