For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் எல்லாம் சும்மா..!! கோலி தான் மத்தவங்களை விட சூப்பர், 80 சதங்கள் அடிப்பார் பாருங்க..!

மும்பை: சச்சினை விட, விராட் கோலி தான் அதிக சதங்கள் அடித்து சாதனை படைப்பார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கணித்துள்ளார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில், கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது.

கோலியின் 42வது சதம்

கோலியின் 42வது சதம்

சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் 120 ரன்னில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இளம்வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 79 ரன்கள் எடுத்தார்.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

இதனை தொடர்ந்து,280 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. மழையால் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ரன்களாக மாற்றி அமைக்கப் பட்டது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முன்னாள் வீரர் கணிப்பு

முன்னாள் வீரர் கணிப்பு

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர், கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 75-80 சதங்களை குவிப்பார் என்று கணித்துள்ளார்.

11 இன்னிங்ஸ் இடைவெளி

இது தொடர்பாக வாசிம் ஜாபர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 11 இன்னிங்ஸ் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயல்பான ஆட்டம் தொடங்கியுள்ளது. என்னுடைய கணிப்பு படி விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 75 முதல் 80 ஒருநாள் சதங்கள் குவிப்பார் என்றார்.

இவர் யார்?

இவர் யார்?

சரி... இந்த கணிப்பை சொல்லும் வாசிம் ஜாபர் யார் என்று பார்ப்போமா? இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகள் ஆடிய வாசிம் ஜாபர், இரண்டு இரட்டை சதங்கள், ஐந்து சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் குவித்துள்ளார்.

Story first published: Tuesday, August 13, 2019, 8:41 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
Skipper kohli may hit nearly 80 century’s in international cricket says former player wasim jaffer.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+