For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோட்டை விட்ட பன்ட்..!! சொல்லி அடித்த ஸ்ரேயாஸ் அய்யர்..! இனி இவருக்கு தான் அந்த 4ம் இடம்..?

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணியை கேப்டன் கோலியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரும் காப்பாற்றி, சரிவில் இருந்து மீட்டனர்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 2வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தவான் நடையை கட்டி அதிர்ச்சி அளித்தார்.

சாதனை கோலி

சாதனை கோலி

தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இவரும் ரோகித் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 19 ரன்கள் எடுத்திருந்த போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

1930 ரன்கள் சாதனை

1930 ரன்கள் சாதனை

இதற்கு முன்பு ஜாவித் மியாண்டட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எடுத்திருந்த 1,930 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். அதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த கோலி அரைசதம் கடந்தார். பிறகு சதத்தையும் எட்டி சாதனை படைத்தார்.

கலக்கிய ஸ்ரேயாஸ் அய்யர்

கலக்கிய ஸ்ரேயாஸ் அய்யர்

இந்த போட்டியில் தொடக்க ஜோடி பெய்லியராக, கோலி அணியை மீட்க களமிறங்கினார். அவருடன் இணைந்த ஸ்ரேயஸ் அய்யரும் கலக்கினார். இருவரும் அற்புதமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

கோலியின் 120 ரன்கள்

கோலியின் 120 ரன்கள்

கடுமையாகவும், திறமையாகவும் போராடிய கோலி 125 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பன்ட், 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கலக்கிய ஸ்ரேயாஸ்

கலக்கிய ஸ்ரேயாஸ்

இந்த தருணத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் சந்தித்த 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இது அவரது 3வது அரைசதம் ஆகும். பின்னர் வந்த கேதர் ஜாதவ் 16 ரன்கள் விளாச இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 279 ரன்கள் குவித்தது.

4வது இடம் யாருக்கு?

4வது இடம் யாருக்கு?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுல் அல்லது மனிஷ் பாண்டே 4வது இடத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு பதிலாக அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப் பட்டார்.

அருமையான சான்ஸ்

அருமையான சான்ஸ்

ஆனால் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தை அப்போது பார்க்க முடியவில்லை. தமது திறமையை நிரூபிக்கும் வகையில் கிடைத்த சான்சை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர்.

எனது விருப்பம்

எனது விருப்பம்

முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றை குறிப்பிடலாம். நான் 4வது இடத்தில் தான் களமிறங்குவேன், அதில்தான் பேட்டிங் செய்ய விருப்பம் என்று நான் கூற முடியாது, அவர்கள் என்னை எந்த இடத்தில் களமிறங்கச் சொல்கிறார்களோ அங்கு களமிறங்குவேன்.

சிறப்பாக விளையாடுவேன்

சிறப்பாக விளையாடுவேன்

தனிப்பட்ட முறையில் நான் 4வது இடத்தில் களமிறங்க விருப்பம் இல்லை. எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்படுவேன் என்று கூறியிருந்தார்.

Story first published: Monday, August 12, 2019, 9:02 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
Skipper kohli, young player shreyas iyer made wonderful partnership to make india as 279.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+