Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs BAN: பழைய இலங்கை அணி மாதிரி இருக்கே.. வங்கதேசத்துக்கு எதிராக அபார பந்துவீச்சு

மும்பை: ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஐந்தாவது ஆட்டத்தில் வங்கதேச அணியும் இலங்கை அணியும் பல பரிட்சை நடத்தியது. வங்கதேச அணி ஏற்கனவே முதல் வெற்றியை பெற்ற நிலையில், இலங்கை அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் துஷாரா மற்றும் சமீரா ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இதன் காரணமாக வங்கதேசத்தில் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 0 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது.

SL vs Ban

இதேபோன்று கடந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடிய தவ்ஹீத் ஹிர்தாய் எட்டு ரன்களிலும் மெஹதி ஹசன் 9 ரன்களிலும் ஆட்டம் இழக்க வங்கதேச அணி 38 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் கேப்டன் லிட்டன் டாஸ் பொறுப்பாக விளையாடி 26 பந்தில் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

எனினும் அவர் ஆட்டம் இழந்தவுடன் வங்கதேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தது. இந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஜாக்கர் அலி மற்றும் சமீம் ஹுசைன் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர். ஜேக்கர் அலி 34 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடங்கும்

இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் நிகழ்ந்த முட்டாள்தனம்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்

சமிம் ஹூசை 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். இதனால் வங்கதேச அணி 139 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. இலங்கை அணியின் பந்து வீச்சு தரப்பில் நுவன் துஷாரா, சமீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்த ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

Story first published: Saturday, September 13, 2025, 22:22 [IST]
Other articles published on Sep 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+