Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SMAT 2024- அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்? பவுலிங்கில் CSK வீரர்கள் ஆதிக்கம்

கடந்த மூன்று வாரம் காலமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரன் விருந்தை வழங்கி வந்த சையது முஸ்தாக் அலி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியும், மும்பை அணியும் பல பரிட்சை நடத்துகிறது.

இந்த நிலையில் சையது முஸ்தாக் கலி தொடரில் அதிக ரன்கள் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். பேட்ஸ்மேன்கள் வரிசையில், மும்பை அணிக்காக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரஹானே 8 போட்டிகளில் 432 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

smat 2024 ipl 2025 rahane csk

இதில் ரகானே ஐந்து அரை சதம் அடித்து 169 என்ற ஸ்டிரைக் ரேட் உடன் முதல் இடத்தில் இருக்கின்றார். இந்த பட்டியலில் பீகாரச் சேர்ந்த கனி என்ற வீரர் 7 போட்டிகளில் 353 ரன்கள் எடுத்து ஒரு சதம் இரண்டு அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேச அணியின் வீரரான ஆர்சிபி நாயகன் ரஜத் பட்டிதார் இருக்கிறார்.

இவர் ஒன்பது போட்டிகளில் 347 ரன்கள் அடித்திருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 182 என்று அளவில் இருக்கிறது. இவர் நான்கு அரை சதம் அடித்திருக்கிறார். நான்காவது இடத்தில் பெங்கால் அணியின் கரண் லால் 338 ரன்களுடனும், ஐந்தாவது இடத்தில் அபிஷேக் போரில் 335 ரன்கள் உடனும், ஆறாம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 329 ரன்களுடனும், ஏழாம் இடத்தில் திலக் வர்மா 327 ரன்கள் உடனும் உள்ளனர்.

இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சட்டீஸ்கர் அணிக்காக விளையாடிய ஜெகதீஷ் சிங் இருக்கிறார். இவர் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடிய கார்த்திகேயா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் சிஎஸ்கே வீரரான முகேஷ் சவுத்ரி மகாராஷ்டிரா அணி சார்பாக களமிறங்கி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

நான்காவது இடத்தில் கர்நாடக அணி சார்பாக களமிறங்கிய சிஎஸ்கே வீரர் ஸ்ரேயாஸ் கோபால் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ஆந்திர பிரதேச அணிக்காக களமிறங்க சசிகாந்த் 14 விக்கெட்டுடனும், ஆறாவது இடத்தில் பரோடா அணிக்காக விளையாடிய ஷேட் என்ற வீரர் 14 விக்கெட் உடனும், ஏழாவது இடத்தில் ஆந்திரா அணிக்காக விளையாடிய ஸ்டீபன் 13 விக்கெட் உடனும் உள்ளனர்.

Story first published: Saturday, December 14, 2024, 23:40 [IST]
Other articles published on Dec 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+