Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பி வந்துட்டேனு சொல்லு! பிரித்வி ஷாவின் அபார பேட்டிங்.. 4 சிக்சர், 5 பவுண்டரி அடித்து அசத்தல்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா தன்னுடைய அடிப்படை விலையான 75 லட்சம் ரூபாய்க்கு கூட ஏலம் போகாத சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டெல்லி அணியால் கடந்த மூன்று சீசன்களாக 7 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பிரித்வி ஷாவுக்கு தற்போது போதாத காலமாக அமைந்து விட்டது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த ஜெய்ஸ்வால் தற்போது உடல் பருமனாக காட்சியளிக்கிறார்.

smat 2024 prithvi shaw ipl 2025 2025

இதனை காரணம் காட்டி ரஞ்சி கோப்பையிலிருந்து பிரித்விஷாவை மும்பை அணி அதிரடியாக நீக்கியது. அதன் பிறகு ஐபிஎல் தொடரிலும் ஏலம் போகாததால் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது. இதனை அடுத்து பலரும் ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை கூறினார்கள். பிரபல கிரிக்கெட் வீரர்கள் கிரேக் சேப்பல், பீட்டர்சன், பாண்டிங் போன்ற வீரர்கள் எல்லாம் ஜெய்ஸ்வால் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

தற்போது சையது முஸ்தாக் அலி தொடரில் பிரிதிவி ஷா மும்பை அணிக்காக விளையாடி வந்தார். எனினும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.33,23,40, 34 போன்ற ரன்களை எல்லாம் பிரித்வி ஷா எடுத்தாலும் இரண்டு டக்கவுட்டும் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். பிரித்வி ஷா அதிரடியாக விளையாடினாலும் ஸ்கோர் கார்டில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் விதர்பா அணிக்கு எதிராக பிரித்வி ஷா இன்று கால் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி சார்பாக களமிறங்கினார். 222 என்ற இலக்கை மும்பை அணி தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா விதர்பாவில் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். ஐந்து பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 26 பந்துகளை பிரிதிவி ஷா 49 ரன்கள் குவித்தார்.

இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 188 ஆகும். பிரித்வி ஷா பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிரடி காட்டியதால் அவர் அரை சதத்தை 1 ரன்னில் மிஸ் செய்தார். பிரித்வி ஷாவின் இந்த அதிரடி தொடக்கத்தால் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரித்வி ஷா மீண்டும் பார்முக்கு வந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, December 11, 2024, 18:25 [IST]
Other articles published on Dec 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+