Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவரின் மோசமான முடிவு.. களத்தை விட்டு நகரமாட்டேன் என எதிர்த்த ஆர்சிபி வீரர்! SMAT பைனலில் பரபரப்பு

சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு ஆதரவாக நடுவர் கொடுத்த முடிவை எதிர்த்து ஆர்சிபி அணி வீரர் ரஜத் பட்டிதார் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியும், மும்பை அணியும் பல பரிட்சை நடத்தியது.

முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தனர். இதில் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக களமிறங்க ரஜத் பட்டிதார் 40 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இதில் ஆறு சிக்ச்ர்களும், ஆறு பவுண்டரிகளும் அடித்தார்.

smat 2024 rajat patidar rahane

மத்திய பிரதேச இன்னிங்ஸில் கடைசி பந்தை ஷர்துல் தாக்கூர் ஓயிடாக வீசினார். இதனை நகர்ந்து வந்து அடிக்க பட்டிதார் முயன்றும் பந்தை தொட முடியவில்லை. ஓயிடாக குறிக்கப்பட்ட மார்க்கையும் தாண்டி பந்து சென்றது. இதற்கு கள நடுவர் ஓயிடு தர இந்த முடிவை எதிர்த்து மும்பை அணி மேல்முறையீடு செய்தது.

அப்போது மூன்றாம் நடுவராக இருந்த அனந்தபத்மநாபன் இது ஓயிடு இல்லை என அறிவித்து விட்டார். இதனை கண்ட ரஜத் பட்டிதார் அதிர்ச்சி அடைந்தார். எனினும் களத்தை விட்டு நகராமல் இது ஓயிடு தான். பந்து ஓயிடு மார்க்கருக்கு தாண்டி சென்று இருக்கிறது என நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை அடுத்து மூன்றாம் நடுவர் மீண்டும் பந்தை ஆய்வு செய்து தவறு செய்து விட்டதாக கூறி அது ஓயிடு தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டார்.

இதை அடுத்து கடைசி பந்து மீண்டும் வீசப்பட அதனை ரஜத் பட்டிதார் சிக்ஸருக்கு விளாசினார். இதனை அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய மும்பை அணி 17.5 ஓவர்கள் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது. நடுவரின் தவறான முடிவை எதிர்த்து களத்தை விட்டு செல்ல மாட்டேன் என ரஜத் பட்டிதார் கூறியதால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story first published: Monday, December 16, 2024, 9:34 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+