Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய மகளிர் அணியில் வெடித்த மோதல்.. ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்பிரீத் இடையே விரிசல்.. காரணம் இதுதான்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து 37 வயதான ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் விலகினார். இதை அடுத்து 30 வயதான தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அனைத்து வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால் இந்த பதவி மாற்றத்திற்குப் பின்னால் இருவருக்குள்ளும் நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த மோதலே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Smriti Mandhana Harmanpreet Kaur Rift Rumors Surface After Captaincy Transition In India Women Team

இருவரும் பல ஆண்டுகள் நட்பாக இருந்து கேப்டன் - துணை கேப்டனாக இந்திய மகளிர் அணியை வழிநடத்தி வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக தங்களுக்குள் இருந்த நட்பை மறந்து நீண்ட நாட்களாக நேருக்கு நேர் முகம் கொடுத்துப் பேசுவதைக் கூட தவிர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய மகளிர் அணியில் இரு பிரிவுகளை உருவாக்கி அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள மந்தனாவை 2 ஆண்டுகளுக்கு முன்பே கேப்டனாக்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் முன்னரே வெளிப்படையாகக் கூறியிருந்தார். டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா தொடர் தோல்விகளைச் சந்தித்த பிறகும் தேர்வுக்குழு கேப்டன் மாற்றத்தைத் தள்ளிப்போட்டது ஸ்மிருதி மந்தனாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

கவுகாத்தியில் நடைபெற்ற பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் கேப்டன் மாற்றம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளிப்படையாக பேசிய பின்னரே ஹர்மன்பிரீத் பதவி விலகும் முடிவுக்கு வந்தார். கடந்த 2022-ல் மிதாலி ராஜிடமிருந்து ஹர்மன்பிரீத் கேப்டன் பதவியைப் பெற்றபோதும் இதேபோன்ற பிளவு உருவானது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது வந்த மெயில்

நரேந்திர மோடி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது வந்த மெயில்

தற்போது ஹர்மன்பிரீத் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வீராங்கனையாக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். எனவே புதிய கேப்டன் மந்தனாவின் கீழ் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதும், அணியின் ஒற்றுமை பாதிக்கப்படுமா என்பதும் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, October 7, 2026, 19:19 [IST]
Other articles published on Oct 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+