Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி மீது மொத்தமா வன்மத்தை இறக்கிய ஹேட்டர்ஸ்.. கலாய்க்கும் மீம்ஸ்!

அகமதாபாத்: சென்னை அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்சருக்கும் முன்பாகவும், பின்பாகவும் தோனி ஹேட்டர்ஸால் சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட மீம்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

16வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது.

Social Media Memes regarding MS Dhoni batting and his six against Gujarat in IPL 2023

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

Social Media Memes regarding MS Dhoni batting and his six against Gujarat in IPL 2023

41 வயதில் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய தோனி, அதிக வயதில் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் இந்தத் தொடருக்கு முன்பாகவே தோனி விளையாடுவது குறித்து எதிரணி ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வந்தது. இந்தப் போட்டிக்கு முன் தோனியின் ஃபார்ம் குறித்து ஏகப்பட்ட கிண்டல்கள் மீம்ஸ் வழியாக வந்தது. தோனி ஹேட்டர்ஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள மீம்களை பார்க்கலாம்.

Social Media Memes regarding MS Dhoni batting and his six against Gujarat in IPL 2023

ருதுராஜ் கெய்க்வாட்டை தவிர்த்து அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது, முன்னதாக இறங்கி ஸ்கோரை உயர்த்த முயற்சிக்காலம் 8ஆவது வீரராக களமிறங்கினார். அதிலும் சிவம் தூபே, ஜடேஜா உள்ளிட்டோருக்கு பின் தோனி மைதானத்திற்கு வந்தார். அதேபோல் தோனி களமிறங்குவதற்கு சிறிது நேரம் பிடித்தது. இதனால் இம்சை அரசன் படத்தில் புலிகேசி வடிவேலு போல் தோனி நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் என்று ரஹானேவிடம் புலம்புவது போல் உருவாக்கப்பட்ட மீம் பலரின் கவனத்தையும் பெற்றது.

Social Media Memes regarding MS Dhoni batting and his six against Gujarat in IPL 2023

ஏற்கனவே சிவம் தூபே அடிக்காமல் டாட் பால்கள் ஆடி இருந்த நிலையில், தோனி பேட்டிங் வரிசையில் 8வது வீரராக களமிறங்கினார். அதனை குறிப்பிட்டு, அண்ணாமலை படத்தில் ரஜினியிடம் மனோரமா பேசும் ஒரு வசனத்தை பட்டி டிங்கரிங் செய்து, இப்டி எட்டாவதா இறங்கத்தான் நெட் பவுலர்ஸ அந்த அடி அடிச்சியா ராசா என்று தோனியை ரசிகர்கள் கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Social Media Memes regarding MS Dhoni batting and his six against Gujarat in IPL 2023

அதேபோல் தோனியின் நெட் பிராக்டீஸ் பற்றி அலப்பறைகள் சமூக வலைதளங்களில் அதிகமாக வந்துகொண்டிருந்தது. நெட் பிராக்டீஸில் இத்தனை பந்துகள் தொலைந்தது, இத்தனை சிக்சர்கள் பறந்தது என்று சில தகவல்கள் வெளியாகும். இந்த நிலையில் சென்னை அணியின் பவுலர்களே, தோனியை, "நெட் ப்ராக்டீஸ்ல என்னிய பொளந்தல்ல போயா" என்று பேசுவது போல் கவுண்டமணி - ரஜினி நடித்த மன்னன் காட்சியை வைத்து மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

Social Media Memes regarding MS Dhoni batting and his six against Gujarat in IPL 2023

அதேபோல் தோனி களமிறங்கி சிக்சர் அடித்த பின் சென்னை அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தையும் மீம்ஸாக வெளியிட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். அதில் ருதுராஜ் அடித்த 92 ரன்களை கூட கண்டுகொள்ளாமல், சென்னை அணி 178 ரன்களை எட்டுவதற்கு தோனியின் சிக்ஸ் தான் காரணம் என்று தல ரசிகர்களை கொண்டாடுவதாக, உயிருக்கு போராடும் விவேக்கை பற்றி கவலைப்படாமல் செல் முருகன் புகைப்படத்தை வைத்து உருவாக்கியுள்ள மீம் அதிகமானோரை ஈர்த்துள்ளது.

அதேபோல் ருதுராஜ் அடித்த 92 ரன்களை தள்ளிபோக செல்லி கண்டுகொள்ளாமல், தோனியின் சிக்சரை என்னா சிக்ஸுடா என்று ஃபயர் விடும் ரசிகர்களை, பிதாமகன் படத்தில் வரும் லைலா பேசும் அங்கிள் தள்ளிப்போங்க என்று பேசும் வசத்துடன் கிண்டல் செய்து தோனி ஹேட்டர்ஸ் வன்மத்தை மொத்தமாக இறக்கியுள்ளனர்.

Story first published: Friday, March 31, 2023, 23:35 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+