Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'பால் பாய்' ஆக மாறிய சச்சின் மகன் அர்ஜூன்... ஆனா 'ராசி' பயமுறுத்துதே...!

மும்பை: தந்தை சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசிப் போட்டியின் 2வது நாளா இன்று பந்துகளை எடுத்துப் போடும் பையன் வேலையை அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மேற்கொண்டுள்ளார்.

முதல் நாளான நேற்று தனது தாயார், பாட்டி, சகோதரி ஆகியோருடன் ஸ்டாண்ட்டில் அமர்ந்து ரசித்துப் பார்த்த அர்ஜூன் இன்று பால் பாய் ஆக மாறி விட்டார்.

அவரது தந்தை சச்சின் டெண்டுல்கரும் கூட சிறுவனாக இருந்தபோது பால் பாய் ஆக இருந்தவர்தான்.. ஆனால் அந்த 'ராசி'தான் சற்று இடிக்கிறது.. அந்த ராசி என்ன என்பதை கடைசி ஸ்லைடில் பார்ப்போம்...

முதல் நாளில் வேடிக்கை

முதல் நாளில் வேடிக்கை

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் போட்டி தொடங்கியபோது ஸ்டாண்ட்டில் அமர்ந்து தனது தாயார், பாட்டி, சகோதரியுடன் சேர்ந்து போட்டியை ரசித்துப் பார்த்தார் அர்ஜூன்.

இன்று பால் பாய்

இன்று பால் பாய்

இன்று பால் பாய் ஆக மாறி விட்டார் அர்ஜூன். பவுண்டரிக்கு வெளியே அவர் துறுதுறுப்பாக காணப்பட்டார்.

அப்பாவும் ஒரு காலத்தில் பாய்தான்...

அப்பாவும் ஒரு காலத்தில் பாய்தான்...

ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரும் கூட பால் பாய் ஆக இருந்துள்ளார்.

1987 உலகக் கோப்பைப் போட்டியின்போது

1987 உலகக் கோப்பைப் போட்டியின்போது

1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது, மும்பை வாங்கடே மைதானத்தில்தான் அரை இறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. அப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

ராசியை நினைச்சா...

ராசியை நினைச்சா...

இப்போது சச்சின் டெண்டுல்கர் ஆடும் போட்டியில், அதே வாங்கடே மைதானத்தில் அவரது மகன் பால் பாய் ஆக மாறியுள்ளார்... எனவே ராசிதான் சற்று இடிக்கிறது.

92 உலகக் கோப்பையில் சச்சின் ஸ்டார் வீரர்

92 உலகக் கோப்பையில் சச்சின் ஸ்டார் வீரர்

ஆனால் 1992ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் போது இந்திய அணியின் முக்கிய வீரராக களம் இறங்கியிருந்தார். ஒரு வேளை இந்த ராசி அர்ஜூனுக்குப் பலிக்குமா என்று பார்ப்போம்...

Story first published: Friday, November 15, 2013, 12:05 [IST]
Other articles published on Nov 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+