மும்பை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடரின் ஒளிபரப்பு உரிமையை பிரபல நிறுவனமான சோனி வாங்கியிருக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக் காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை தற்போது சோனி நிறுவனம் வாங்கியுள்ளதால் அந்த சேனலே தொடரை ஒளிபரப்புகிறது.
வழக்கமாக போட்டிகளை ஒளிபரப்பி வந்த ஸ்டார் ஸ்போர்ட்சில் இந்த போட்டிகளை காண முடியாது. சோனி டென் 1 என்ற சேனலில் இந்த தொடரை ஆங்கில வர்ணனையில் காணலாம். அதே போல சோனி டென் 3 என்று சேனலில் இந்த தொடரை இந்தி வர்ணனையில் பார்த்து மகிழலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.