Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கோலி எடுத்த முடிவால் வந்த வினை தான் இது”.. கேப்டன்சி மாற்றத்தில் வற்புறுத்தலா?.. கங்குலி ஓபன் டாக்!

மும்பை: ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றப்பட்டது விராட் கோலியின் முடிவினால் வந்த வினை தான் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

Recommended Video

Ganguly on Rohit replacing Kohli as ODI skipper | OneIndia Tamil

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக செல்லவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முதல் ரோகித் சர்மா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

கேப்டன்சி சர்ச்சை

கேப்டன்சி சர்ச்சை

இந்த விவகாரத்தில் தற்போது புது சர்ச்சை வெடித்துள்ளது. விராட் கோலிக்கு பதவி விலக விருப்பம் இல்லை என்றும், பிசிசிஐ சார்பில் அவரை கட்டாயப்படுத்தி பதவியை பறித்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முன்னாள் வீரர் சாபா கரீமும் இது குறித்து பகிரங்கமாக தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்து விராட் கோலி தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

சவுரவ் கங்குலி பதில்

சவுரவ் கங்குலி பதில்

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியே இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த முடிவு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு இணைந்து எடுத்தது தான். இல்லை என்று கூறவில்லை. ஏனென்றால் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு 2 கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல. இதற்காக தான் முன்னரே விராட் கோலியிடம் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகாதீர்கள் என கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. அவர் பதவி விலகியதால் தான் தற்போது இந்த முடிவு எடுக்க நேரிட்டது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இறுதியில் விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் செயல்படுவார் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. ரோகித் சர்மா ஒருநாள் அணி கேப்டன் ஆனார். பிசிசிஐ தலைவர் என்ற வகையில் நான் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். தேர்வுக்குழு அதிகாரிகளும் கோலியிடம் பேசினர். அதன்பின்னர் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

நன்றிகள்

நன்றிகள்

ரோகித் சர்மா குறித்து பேசிய கங்குலி, ரோகித்தின் கேப்டன்சி திறமைகள் மீது பிசிசிஐ-க்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சிறப்பானவர்களின் கையில் பாதுகாப்பாக தான் உள்ளது என நம்புகிறேன். இத்தனை ஆண்டுகள் விராட் கோலி செய்த சிறப்பான கேப்டன்சிக்கு, நன்றி என கங்குலி தெரிவித்தார்.

Story first published: Thursday, December 9, 2021, 23:20 [IST]
Other articles published on Dec 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+