Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி என்ன தான் சொல்றாரு? பாக். கூட ஆடக் கூடாதுங்கிறார்.. சச்சின் சொல்றது சரிங்கிறார்!

மும்பை : புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் உலகக்கோப்பையில் கிரிக்கெட் ஆடக் கூடாது என ரசிகர்கள் பலரும் கூறினர்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த சச்சின், இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி அந்த அணியை வீழ்த்த வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் இரண்டு புள்ளிகள் அணிக்கு முக்கியம் என கூறினார்.

சச்சின் கருத்து

சச்சின் கருத்து

முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் விளையாடக் கூடாது என கூறி வரும் நிலையில், அதற்கு மாறாக கிரிக்கெட் ஆட வேண்டும் என சச்சின் கூறிய கருத்து சிலரது விமர்சனத்துக்கு ஆளானது.

முக்கியம்

முக்கியம்

இது குறித்து கங்குலியிடம் கேட்ட போது, "அவருக்கு இரண்டு புள்ளிகள் வேண்டும். எனக்கு உலகக்கோப்பை வேண்டும். அதை எப்படி பார்த்தாலும் சரி" என கூறினார். முன்னதாக கங்குலி, இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமல்லாது அனைத்து வித விளையாட்டுத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறி இருந்தார்.

ஒரே வழி

ஒரே வழி

சச்சின் கருத்து பற்றி கங்குலி பேசிய போது, "எனக்கு தெரிந்து அது தான் முன்னேறிச் செல்ல ஒரே வழி. அவர் இந்த விஷயத்தை எல்லாம் கட்டுப்படுத்தவில்லை. அவரால் என்ன கட்டுப்படுத்த முடியும் என்றால், அவர்கள் (இந்திய அணி) எப்படி விளையாடினார்கள் என்பதையும், எப்படி விளையாடுவார்கள் என்பதையும் தான்" என்றார்.

அரசு தான் முடிவு எடுக்கும்

அரசு தான் முடிவு எடுக்கும்

மேலும், "எப்போதும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அரசு தான் முடிவு எடுக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. நிச்சயம் கிரிக்கெட் வீரர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்" என்றார்.

கங்குலி என்ன சொல்கிறார்?

கங்குலி என்ன சொல்கிறார்?

கங்குலி, தற்போது சச்சின் கருத்தை ஆதரிப்பது போல பேசினாலும், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என்பதே அவரது கருத்தாக உள்ளது. பிசிசிஐ இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Story first published: Sunday, February 24, 2019, 19:17 [IST]
Other articles published on Feb 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+