ஐபிஎல் எதிர்காலமே இந்த 5 வீரர்களை நம்பி தான் இருக்கு.. கங்குலி சொன்ன பட்டியல்.. சரி தானா?
மும்பை : ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. ஒரு முறை ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் வாழ்க்கை செட்டில் எனற நிலை வந்துவிட்டது. இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடி பல வீரர்கள் பிரபலாமாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தோனி, உள்ளிட்ட ஜாம்வான் தங்களது இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்க்கைககு வந்துவிட்ட நிலையில், இனி ஐபிஎல் தொடரில் யார் சாதிப்பார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் ன்னாள் கேப்டன் கங்குலி, டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான். ஆனால் அவர் தற்போது இளம் வீரர் கிடையாது.

பிரித்வி ஷா
பிரித்வி ஷா நல்ல திறமையான வீரராக இருக்கிறார் என்று கங்குலி பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் 63 போட்டியில் விளையாடி 1588 ரன்களை அவர் விளாசி இருக்கிறார். இதில் 12 அரைசதம் அடங்கும். அதற்கு அடுத்ததாக கங்குலி தேர்வு செய்த வீரர் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்க்கு 25 வயது தான் ஆகிறது.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் இதுவரை 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2838 ரன்களை அடித்துள்ளார். கடந்த சீசனில் 14 போட்டியில் விளையாடி 340 ரன்கள் அடித்திருக்கிறார். எனினும் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் நடப்பு தொடரில் விளையாட மாட்டார்.

ருத்துராஜ்
அடுத்ததாக கங்குலி லிஸ்டில் இருப்பவர் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட .இதுவரை 36 போட்டியில் விளையாடியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட் 1207 ரன்களை அடித்ததுடன், அதிவேகமாக ஆயிரம் ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்தார். ஆரஞ்ச் நிற தொப்பி வென்றுள்ள ருத்துராஜ், ஒரு சதம், 10 அரைசதம் அடித்துள்ளார்.

சுப்மன் கில்
சுப்மன் கில் பெயரை மறநதுவிட்டேன். அவர் சிறந்த பேட்ஸ்மேனாக ஐபிஎல் தொடரில் லிப்பார் எனறு கங்குலி கூறினார். கங்கலியின் இந்த லிஸ்டில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் லிக் மட்டும் இருக்கிறார். உம்ரான் மாலிக் உடல் தகுதியுடன் இருந்தால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications