Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா கோட்டை விட்டது.. டிராவிட், ரோகித் மீது கங்குலி கடும் தாக்கு..எப்படி இந்த முடிவை எடுத்தீங்க?

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் முடிவில் 151 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

sourav Ganguly slams Team india decision not to include Ashwin

இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்த இந்திய அணி உமேஷ் யாதவை சேர்த்து அஸ்வினை வெளியே உட்கார வைத்தது. இது ரோகித் சர்மா எடுத்த தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. காரணம் ஆடுகளத்தில் ஒரு அளவுக்கு மேல் வேகப்பந்துவீச்சு எடுபடவில்லை. இதுவே ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை நாதன் லயன் என்ற தலைசிறந்த ஆப் ஸ்பின்னரை அவர்கள் பராமரிக்கின்றனர்.

லயன் சிறப்பாக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் ஜடேஜாவின் விக்கெட்டை 48 ரன்கள் இருக்கும்போது கைப்பற்றினார். அப்போது கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் கேப்டன் கங்குலி, டிராவிட் ரோகித் சர்மாவை மறைமுகமாக தாக்கி பேசினார். "இந்த பந்தை பாருங்கள். ஆப் ஸ்பின்னர் இந்த ஆடுகளத்தில் பந்து வீச முடியாது என்று யார் சொன்னார்.

லயான் 400 விக்கெட்டுகளுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறார். ஜடேஜா ஒரு இடது கை பேட்ஸ்மேன். இந்த தருணத்தில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனை அவர் வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் பந்து திரும்பவும் செய்து பவுன்சும் ஆனது" என்று கங்குலி குறிப்பிட்டார்.

sourav Ganguly slams Team india decision not to include Ashwin

அஸ்வின் போன்ற மேட்ச் வின்னரை இந்தியா சேர்க்காமல் விட்டது பெரிய தவறு மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை. ஜடேஜா ஒரு முனையில் இருந்து நெருக்கடி ஏற்படுத்த மறுமுனையில் ரன்கள் அதிக அளவில் கிடைத்தது என்று கங்குலி கூறியுள்ளார். தற்போது இந்திய அணி ஃபாலோ ஆணை தவிர்க்க வேண்டும் என்றால் மேலும் 118 ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் மட்டும்தான் இருக்கிறது.

Story first published: Friday, June 9, 2023, 9:16 [IST]
Other articles published on Jun 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+