For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள்... டுமினி, பிலான்டர் வெளியே, அப்பாட் உள்ளே!

By Veera Kumar

சிட்னி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

அந்த அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

South Africa bat, miss Duminy and Philander

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோதின.

மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்திடம் தோல்வியும், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளிடம் வெற்றியும் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவை பொறுத்தளவில், ஜிம்பாப்வேயிடம் வெற்றியும், இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துள்ளது.

பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி ஆடுகளத்தில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் இருந்த மூன்று வீரர்கள் இந்த போட்டியில் ஆடவில்லை, அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்கள் உள்ளே வந்துள்ளனர்.

முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் டுமினி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வெர்னோ பிலான்டர் ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் ஆடவில்லை. இவர்களுக்கு பதிலாக ரில்லே ருஸ்சவு, கைல் அப்பாட் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நன்கு வாங்கிக் கட்டிய பவுலர் பர்னெல் வெளியேற்றப்பட்டு, பர்ஹான் பெகார்தின் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார்.

இநத் போட்டியில் வெற்றி பெற்றால்தான் இழந்த தன்னம்பிக்கையை மீட்க முடியும் என்ற கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா இருப்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் மே.இ.தீவுகளை பொறுத்தளவில் காயமடைந்திருந்த முன்னணி ஸ்பின்னர் சுலைமான் பென், மீண்டும் அணிக்கு வந்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியே. இதற்காக கடந்த போட்டியில் ஆடிய நிகிதா மில்லர் வெளியேற்றப்பட்டுள்ளார். மற்றபடி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஆடுகின்றனர்.

இன்றைய போட்டியில் ஆடும் தென் ஆப்பிரிக்க 11 பேர் கொண்ட அணி விவரம்: ஹசிம் ஆம்லா, ஏபிடி வில்லியர்ஸ் (கேப்டன்), குயின்டர் டி காக் (விக்கெட் கீப்பர்), டு பிளிசிஸ், டேவிட் ல்லர், பர்ஹான் பெகார்தின், மோர்ன் மோர்கல், டேல் ஸ்டெயின், இம்ரான் தாகிர், கைல் அப்பாட், ரில்லே ருஸ்சவு.

மேற்கிந்திய தீவுகள் அணி விவரம்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், ஜோனாதன் கார்டர், கிறிஸ் கெயில், தினேஷ் ராம்டின், ஆன்ட்ரே ரசல், டேரன் சமி, லென்ட்ல் சிமன்ஸ், ட்வைன் ஸ்மித், ஜெரோம் டைலர்.

Story first published: Friday, February 27, 2015, 11:27 [IST]
Other articles published on Feb 27, 2015
English summary
Neither JP Duminy nor Vernon Philander was fit to take field, which paved the way for Rilee Rossouw and Kyle Abbott to slot in. Wayne Parnell was dropped for Farhaan Behardien after his show against India proved to be South Africa's worst analysis in World Cups.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+