Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. மன்னிப்புடன் வங்கதேச டூரை ஆரம்பித்த தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி!

டாக்கா: வங்கதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பறக்க விட்டு போட்டோ எடுத்ததற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக வங்கதேசம் வந்துள்ளது. முதல் டி20 போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

போட்டோ, வீடியோ

போட்டோ, வீடியோ

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டாக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணி பயிற்சியில் ஈடுபட்டபோது, மைதானத்திற்கு மேலே ட்ரோன் எனப்படும் ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டு, அதில் பொருத்திய கேமரா மூலம், வீரர்களின் பயிற்சி போட்டோ மற்றும் வீடியோவாக படமெடுக்கப்பட்டது.

தடை

தடை

இதுகுறித்து வங்கதேச பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு தகவல் சென்றது. உடனடியாக அவர்கள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பிடம் சொல்லி, ட்ரோனை தரையிறக்க உத்தரவிட்டனர். எனவே படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ட்ரோன் இறக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பறக்க முடியாது

பறக்க முடியாது

வங்கதேச வான் எல்லையில், முன் அனுமதியில்லாமல், ஆளில்லாத விமானம், ஹெலிகாப்டர் போன்ற ஊர்திகள் பறக்க கடந்த டிசம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் மேலாண்மை குழுவிடம் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இவ் உத்தரவை பிறப்பித்துள்ளதால்தான், ட்ரோன்களுக்கு தடை சொல்லியதாக அவர்கள் விளக்கம் கொடுத்தனர்.

மன்னிச்சிருங்கோ..

மன்னிச்சிருங்கோ..

இதையடுத்து, வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம், மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமி மேலாளர் முகமது மூசாஜே கூறுகையில், "பயிற்சியின்போது, டாப் கோணத்தில் இருந்து படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து எங்களது யூடியூப் சேனலில் வெளியிடுவதற்காக ட்ரோன் கொண்டு வந்திருந்தோம்" என்றார். ஆனால் ட்ரோன் வங்கதேச நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதே அதை தடுப்பதில் தோல்வியடைந்துள்ளனர் வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகள்.

வங்கதேச சேட்டைகள்

வங்கதேச சேட்டைகள்

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால், வங்கதேசத்தில் இந்திய அணி ரசிகர் தாக்கப்பட்டார். இந்திய அணி வீரர்கள் பாதி மொட்டையுடன் நிற்பது போன்ற கேலி சித்திரத்தை வங்கதேச பத்திரிகை வெளியிட்டது. இப்போது தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை தொடங்கும் முன்பே சிக்கலில் மாட்டியுள்ளது.

Story first published: Friday, July 3, 2015, 10:22 [IST]
Other articles published on Jul 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+