Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக்-லயன்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தோல்வி

ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டித் தொடரின் முதல் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தென் ஆப்பிரிக்காவின் ஹைவெல்ட் லயன்ஸ் அணியிடம் 9 ரன்களில் தோல்வியுற்றது.

முதலில் ஆடிய லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடத் தொடங்கியது மும்பை அணி. சச்சின், கீரன் பொலார்ட் என சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணி என்பதால்வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இருந்தது. தொடக்கமும் அப்படியே சிறப்பாகவே இருந்தது. ஆனால் இறுதியில் மும்பை அணியை, லயன்ஸ் தனது பந்து வீச்சால் கட்டுப்படுத்தி வெற்றியைத் தட்டிச் சென்று விட்டது.

மும்பை அணியில் சச்சினும், ஷிகார் தவனும் அபாரமாக ஆடினர். ஆனால் லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஷான் பர்கர் எடுத்த முக்கியமான 2 விக்கெட்கள், மும்பையின் வீழ்ச்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

லயன்ஸ் அணியில் வான்டியர் 71 ரன்களைக் குவித்தார். மெக்கன்சி 56 ரன்கள் எடுத்தார்.

மும்பை தரப்பில் சச்சின் 69 ரன்களைக் குவித்தார். தவன் 32 ரன்களைச் சேர்த்தார். பொலார்ட் 19 ரன்களுடன் நடையைக் கட்ட டுமினி சிறப்பாக ஆடி 30 ரன்களைக் குவித்தார்.

இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களுடன் நின்று போனது மும்பையின் வெற்றி வேட்டை.

Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+