Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - 1st ODI 4 வீரர்களுக்கு இன்றைய ஆட்டம் ரொம்ப முக்கியம்.. வாழ்க்கையே திருப்பி போடலாம்

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 4 வீரர்களுக்கு இது முக்கியமான ஆட்டமாக கருதப்படுகிறது.

டி20 உலககோப்பை போட்டியில் பும்ராவுக்கு பதில் யார் மாற்று வீரர் என்பதை தீர்மானிக்க இந்த தொடர் முக்கியமானதாக கருதப்படும்.

மேலும், அடுத்த ஆண்டு ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதற்கான அணியில் இடம்பெற இந்த தொடர் முக்கிய பாலமாக அமையும்.

ருத்துராஜ் கெய்க்வாட்

ருத்துராஜ் கெய்க்வாட்

இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக விளங்கும் ருத்துராஜ் கெய்க்வாட், பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு இன்றைய ஆட்டத்தில் தான் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்குகிறார். ருத்துராஜ் கெய்க்வாட் தனது வழக்கமான சதம் அடிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவரது திறமையை இந்த தொடரில் நிரூபித்தால், அது அவருக்கு திருப்புமுனையாக அமையும்.

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

இந்திய அணி ரசிகர்களால் லார்ட் ஷர்துல் தாக்கூர் என வர்ணிக்கப்படுத் தாக்கூர், கடந்த சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. இதனால் அணியில் இருந்து தனது இடத்தை இழந்த ஷர்துல் தனது இடத்தை மீண்டும் நிரப்ப, இந்த தொடர் பெரும் வாய்ப்பாக அமையும். இந்த தொடரில் தனது பேட்டிங் திறமையும் அவர் வெளிப்படுத்தலாம்.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

முகமது ஷமி இன்னும் உடல் தகுதியை எட்டாத நிலையில், பும்ரா இடத்தை பிடிக்க சிராஜ்க்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் முகமது சிராஜ் ஒருநாள் தொடரில் துல்லியமாக பந்துவீசினால், அணிக்குள் கொண்ட வரப்படுவார். இதனால், திருப்புமுனை தொடராக முகமது சிராஜ்க்கு பார்க்கப்படுகிறது.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

டி20 உலககோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக ஆவேஷ் கான் இருப்பார் என கருதப்பட்டது. ஆனால் ஆசிய கோப்பை தொடரின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் அணிக்குள் வந்துள்ள ஆவேஷ் கான், தனது யாக்கர் வீசும் திறமையை நிரூபித்தால், டி20 உலககோப்பை அணியில் இடம்பெறலாம்.

Story first published: Thursday, October 6, 2022, 18:35 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+