Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

250 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 250 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மழையால் ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது ஷிகர் தவான் தலைமையிலான இன்றைய ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட், ரிவி பிஸ்னாய் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

டாஸ் வென்ற இந்திய அணி முதல் பந்துவீசியது. ஆடுகளம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.

அருமையான பந்துவீச்சு

அருமையான பந்துவீச்சு

இதனை பயன்படுத்தி கொண்டு இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்கள். எனினும் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினாலும் தங்களது விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். 42 பந்துகளை எதிர்காண்ட ஜென்னிமான் மாலன் 42 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாக்கூர் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மொத்தமே 3 ரன்கள் மட்டுமே அடித்த பெவுமா, இன்று ரன்கள் சேர்த்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். ஆனால், ஷர்துல் தாக்கூர் பந்தில் 8 ரன்களில் கிளின் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஏய்டன் மார்க்ரம் களத்திற்கு வந்தார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

அப்போது குல்தீப் யாதவ் வீசிய பந்து நன்றாக திரும்பி, ஸ்டம்பை பதம் பார்த்தது. இதே போன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 54 பந்துகளுக்கு 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து 5வது விக்கெட்டுக்கு கிளாசன் , டேவிட் மில்லர் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

250 ரன்கள் இலக்கு

250 ரன்கள் இலக்கு

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். மேலும் டேவிட் மில்லர் கொடுத்த 2 கேட்சை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதன் மூலம் 40 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 249 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் , பிஸ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Thursday, October 6, 2022, 19:54 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+