For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்.. உம்ரானுக்கு வாய்ப்பு இல்லை.. ரிஷப் பண்ட் எடுத்த ரிஸ்க்

டெல்லி: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் தொடங்கியது.

சொந்த மைதானத்தில் தனது கேப்டன் பயணத்தை தொடங்கிய ரிஷப் பண்ட்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் தொடர்ந்து 13 டி20 போட்டியில் வென்று இந்திய அணி உலக சாதனை படைக்கும்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

டாஸ் போடப்பட்ட போது சிறு குழப்பம் ஏற்பட்டது. டாஸை யார் என்ன செய்தார் என்று முதலில் தெரியவில்லை பிறகு பெவுமா வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க அணி நட்சத்திர வீரர் மார்க்ரமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

சிஎஸ்கே, மும்பை வீரர்கள்

சிஎஸ்கே, மும்பை வீரர்கள்

சிஎஸ்கே வீரர் பிரிட்டோரியஸ், பானேல் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெவுமா, தொடரை வெற்றியுடன் தொடங்குவோம் என்று குறிப்பிட்டார். அதிரடி வீரர் ஸ்டம்ப்ஸ்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த பேசிய ரிஷப் பண்ட், முதன் முதலில் சொந்த மண்ணில்,கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக ரிஷப் பண்ட் குறிப்பிட்டார்.

ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

தாமும் டாஸ் வென்று பந்துவீச தான் நினைத்தேன் என்று குறிப்பிட்ட ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டார். முதலில் பேட் செய்வதால் எந்த நெருக்கடியும் இல்லாமல் பெரிய இலக்கை நிர்ணயிப்போம் என்றும் ரிஷப் பண்ட் தெரிவித்தார். பேட்டிங் செய்ய டெல்லி மைதானம் சிறந்தது என்றும் ரிஷப் குறிப்பிட்டார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்

தென்னாப்பிரிக்க அணி 1, குயின்டன் டி காக், 2. பெவுமா, 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. ஸ்டம்ஸ். 6. பெர்னல். 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஷாம்சி. 10. ரபாடா. 11. நோக்கியா

Story first published: Thursday, June 9, 2022, 19:18 [IST]
Other articles published on Jun 9, 2022
English summary
South Africa won the toss and choose to bowl amid covid scare3 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்.. உம்ரானுக்கு வாய்ப்பு இல்லை.. ரிஷப் பண்ட் எடுத்த ரிஸ்க்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+