Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: மீண்டும் உக்கிரமாகும் மழை.. அதுவும் நாள் முழுவதும் - ரசிகர்கள் ஏமாற்றம்

சவுத்தாம்ப்டன்: ஆக.. இன்றைய நான்காவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாம். ஸோ, அப்படி இப்படி என்று போட்டி டிரா ஆகிவிடும் போல.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உண்மையில் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. மழை குறுக்கிட்டு போட்டியை ஏறக்குறைய காலி செய்துவிட்டது எனலாம்.

மழை காரணமாக ஜூன்.18ம் தேதி தொடங்க வேண்டிய போட்டி, ஜூன் 19ம் தேதி தான் துவங்கியது. ஆனால், ஒருநாள் கூட முழுமையாக போட்டி நடைபெறவில்லை.

5 விக்கெட்ஸ்

5 விக்கெட்ஸ்

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அரை சதம்

அரை சதம்

பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். 11 ஓவர்கள் மட்டுமே வீசிய பும்ராவால், ஒரு பெர்சென்ட் கூட தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை என்பது தான் ஹைலைட்.

100 சதவிகிதம்

100 சதவிகிதம்

இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டி தொடங்கும் நேரமான காலை 10 மணிக்கு, 100 சதவிகிதம் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காலை 11 மணிக்கு 98 சதவிகித மழை வாய்ப்பும், மதியம் 12 மணிக்கு 95 சதவிகித மழை வாய்ப்பும் உள்ளதாக கூறியுள்ளது.

எவ்வளவு மழை?

எவ்வளவு மழை?

ஒவ்வொரு மணி நேரமும் மழைக்கு எவ்வளவு வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

மதியம் 1 மணி - 93% மழை வாய்ப்பு

மதியம் 2 மணி - 92% மழை வாய்ப்பு

பிற்பகல் 3 மணி - 90% மழைக்கு வாய்ப்பு

மாலை 4 மணி - 83% மழைக்கு வாய்ப்பு

மாலை 5 மணி - 80% மழைக்கு வாய்ப்பு

மாலை 6 மணி - 78% மழைக்கு வாய்ப்புஸோ, ஒட்டுமொத்தமாக பார்த்தோமெனில், இன்றைய நான்காம் நாள் ஆட்டம் பல முறை மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, இன்றைய ஒட்டுமொத்த நாளும் மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

சரியாப் போச்சு போ!

Story first published: Monday, June 21, 2021, 10:34 [IST]
Other articles published on Jun 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+