For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி கூட்டத்தில் பாகிஸ்தான் திட்டம் தோல்வி.. இந்தியா போட்ட பிளானுக்கு வெற்றி.. என்ன நடந்தது?

பிர்மிங்காம்: அடுத்த 5 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அட்டவணையை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக இங்கிலாந்தில் ஐசிசி உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் இந்தியா தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டது.

அதற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட, தற்போது இந்தியா அதனை வெற்றிக்கரமாக தகர்த்துள்ளது.

பெரிதாகும் ஐபிஎல்

பெரிதாகும் ஐபிஎல்

இந்தியாவை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளை இனி வரும் காலங்களில் பெரிதாக நடத்தி, அதன் மூலம் லாபம் மேற்கொள்ள காய் நகர்த்தியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மூலம் பிசிசிஐ 40 ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளியது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை உயர உள்ளது.

எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

2023 ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எண்ணிக்கை 74 ஆகவும், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு 84 போட்டிகளும், 2027ஆம் ஆண்டு 94 போட்டிகளாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அளவுக்கு போட்டிகளை நடத்த, அதற்கு ஏற்ப நேரம் வேண்டும். மற்ற நாட்டு வீரர்களும் முழுமையாக தொடரில் விளையாட வேண்டும்.

2 மாதம்

2 மாதம்

இதற்காக, ஐபிஎல் போட்டிகள் நடத்த இரண்டரை மாதங்கள் பிரத்யேக காலம் வேண்டும் என்றும், அந்த நேரத்தில் மற்ற சர்வதேச போட்டிகள் நடத்த கூடாது என்றும் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து, ஜூன் மாதம் முதல் 10 நாள் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தவில்லை என்று ஐசிசி ஒப்புகொண்டது.

மற்ற நாடுகளுக்கும் அனுமதி

மற்ற நாடுகளுக்கும் அனுமதி

இதே போன்று டிசம்பர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவும், பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானும், ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தும், செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டிஸ் அணிகளும் அவர்கள் நாடு நடத்தும் டி20 தொடருக்காக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதற்கு தகுந்தால் போல் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது.

Story first published: Sunday, July 17, 2022, 1:39 [IST]
Other articles published on Jul 17, 2022
English summary
Special Window for IPL Recognaized by ICC Despite PCB Objection ஐசிசி கூட்டத்தில் பாகிஸ்தான் திட்டம் தோல்வி.. இந்தியா போட்ட பிளானுக்கு வெற்றி.. என்ன நடந்தது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+