Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

200வது டெஸ்ட் - எங்கப்பா ஆடுவார் சச்சின்...பெரிய குழப்பமா இருக்கே!

டெல்லி: சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என்பது ஒரு பக்கம் இருக்க, அவர் தனது 200வது டெஸ்ட் போட்டியை எங்கு ஆடுவார் என்பது பாப்பையா பட்டிமன்றத்தில் வைத்து விவாதிக்கலாம் போல.. அம்புட்டு குழப்பமாக இருக்கிறது போட்டி மைதானம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள்.

மும்பையில் ஆடுவார், கொல்கத்தாவில் ஆடுவார், பெங்களூரில் ஆடுவார் என்று ஆளுக்கு ஒரு பேச்சு பேசி வருகிறார்கள்.

ஆனால் சச்சினின் எதிர்காலத் திட்டத்தைப் பொறுத்தே அவர் ஆடப் போகும் மைதானம் முடிவாகும் என்று தெரிகிறது.

அங்கிட்டு போய் விளையாடலாமா...

அங்கிட்டு போய் விளையாடலாமா...

சச்சின் தனது 200வது போட்டியை மும்பை மைதானத்தில் ஆட வேண்டும் என்பது அவரது ரசிகர்கள் விருப்பமாக உள்ளது. கங்குலி உள்ளிட்ட சிலரும் கூட இதை ஆதரித்துள்ளனர்.

அங்கிட்டு வேணாம், இங்கிட்டு போவோம்

அங்கிட்டு வேணாம், இங்கிட்டு போவோம்

ஆனால் சிலரோ மும்பையில்தான் என்றில்லை. எங்கு வேண்டுமானாலும் சச்சின் விளையாடலாம், அதற்குரிய தகுதி படைத்தவர் அவர் என்று சொல்கிறார்கள்.

கொல்கத்தா ஓ.கே.வா...

கொல்கத்தா ஓ.கே.வா...

மறுபக்கம் இந்தியக் கிரிக்கெட் வாரியம் இப்போதைக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை தேர்வு செய்து வைத்திருக்கிறதாம்.

அதாவது பாருங்க.. சச்சின் சொல்லட்டும்...

அதாவது பாருங்க.. சச்சின் சொல்லட்டும்...

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதாவது சச்சின் தனது எதிர்காலத் திட்டம் குறித்து என்ன நினைத்திருக்கிறாரோ அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்றார்.

ஓய்வு பெற்றால் மும்பை.. இல்லாட்டி கொல்கத்தா

ஓய்வு பெற்றால் மும்பை.. இல்லாட்டி கொல்கத்தா

மேலும் அவர் கூறுகையில் 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறுவதாக இருந்தால் மும்பையில் போட்டி நடத்தப்படும். இல்லாவிட்டால் கொல்கத்தாவில் நடத்தப்படும் என்றார் அவர்.

பெங்களூரும் பட்டியலில்

பெங்களூரும் பட்டியலில்

அதேசமயம், பெங்களுரையும் மனதில் வைத்துள்ளதாம் கிரிக்கெட் வாரியம்.

Story first published: Friday, September 6, 2013, 13:30 [IST]
Other articles published on Sep 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+