Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபேஸ்புக்கிலும் சச்சின் சாதனை: 1 கோடியை தொடப் போகும் 'பேன்ஸ்'!

மும்பை: ஃபேஸ்புக்கில் சேர்ந்த 5 மாதத்திற்குள் சச்சினுக்கு 90 லட்சம் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் இருக்கும் வரை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இருக்கும். ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் அத்தனை சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். இத்தனை சாதனைகள் படைத்தாலும் எதுவமே செய்யாதது போன்று மிகவும் அமைதியாக, அடக்கமாக இருப்பவர். இந்த குணம் தான் சச்சினை அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வைத்துள்ளது.

இன்றைய பிரபலங்கள் எல்லாரும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் உள்ளனர். ஆனால் சச்சின் ஏனோ ஃபேஸ்புக்கில் முதலில் சேரவில்லை. அதன் பிறகு தான் ஒரு வழியாக ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். சச்சினை ஃபேஸ்புக்கில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. கிரிக்கெட் மட்டுமின்றி சச்சின் ஃபேஸ்புக்கில் சாதனை படைத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் சேர்ந்த கையோடு 4 லட்சம் லைக்

ஃபேஸ்புக்கில் சேர்ந்த கையோடு 4 லட்சம் லைக்

சச்சின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். அட என்ன ஆச்சரியம் அவர் ஃபேஸ்புக்கில் சேர்ந்த சில மணிநேரத்திலேயே அவரது பெயருக்கு 4 லட்சம் பேர் லைக் கொடுத்தனர்.

வீடியோ மெசேஞ் போட்டு வரவேற்பு

வீடியோ மெசேஞ் போட்டு வரவேற்பு

சச்சின் ஃபேஸ்புக்கில் வீடியோவில் பேசிய மெசேஜ் போட்டு தனது ரசிகர்களை வரவேற்றார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நான் உங்கள் அனைவரையும் ஃபேஸ்புக் குடும்பத்திற்கு வரவேற்கிறேன். இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று குழந்தைப் பருவத்தில் இருந்தே கனவு கண்டேன். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு 22 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. உங்கள் ஆதரவின்றி இது சாத்தியமில்லை. எனக்காக பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்றார்.

5 மாதம் கூட ஆகல ஆனால் 90 லட்சம் ரசிகர்கள்

5 மாதம் கூட ஆகல ஆனால் 90 லட்சம் ரசிகர்கள்

சச்சின் ஃபேஸ்புக்கில் சேர்ந்து இன்னும் 5 மாதம் கூட நிறைவடையவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு 90 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்து.

90 லட்சம் தேங்ஸ்

90 லட்சம் தேங்ஸ்

குறுகிய காலத்தில் தனக்கு ஃபேஸ்புக்கில் 90 லட்சம் ரசிகர்கள் கிடைத்துள்ளது சச்சினுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, 90 லட்சம் நன்றிகள். என்னை ஸ்பெஷலாக உணர வைத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 10, 2013, 16:33 [IST]
Other articles published on Jan 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+