
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மென்டர் (தலைமை வழிநடத்துநர்) பொறுப்பும் வகித்தார்.
இந்த நிலையில் திடீரென பெங்களூர் அணியிலிருந்து விலகியிருக்கிறார் கும்ப்ளே. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை மென்டராக (தலைமை வழிநடத்துநராக) ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.