Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை பைனல்.. ரோஹித், புஜாராவை விடுவிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!

BCCI
டெல்லி: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் ஷர்மா, புஜாரா ஆகியோரை அனுப்புமாறு மும்பை மற்றும் செளராஷ்டிரா அணிகள் விடுத்த வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டிகள் வரும் 26-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மும்பை மற்றும் செளராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் மும்பை அணியில் ரோஹித் ஷர்மாவும் செளராஷ்டிரா அணியில் புஜாராவும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இருவரையும் விடுவித்து இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்குமாறு இரண்டு அணிகளும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கோரிக்கை விடுத்தன.

ஆனால் சர்வதேச போட்டிகள் நடைபெறும் நிலையில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வீரர்களை அனுமதிப்பது இல்லை. இதனால் இருவரையும் அனுப்ப முடியாது என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கைவிரித்துவிட்டது.

Story first published: Tuesday, January 22, 2013, 12:38 [IST]
Other articles published on Jan 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+