Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், பான்டிங்கை விட லாரா ஒரு படி மேலதான்.. ஷாஹித் அப்ரிடி

கராச்சி: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பான்டிங் ஆகியோரை விட ஒரு படி மேல்தான் தெரிகிறார் பிரையன் லாரா என்று பேசியுள்ளார் பாகிஸ்தன் அணியின் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி.

முட்டை பர்ஸ்ட்டா.. கோழி பர்ஸ்ட்டா கதைதான் இதுவும். ரொம்ப காலமாகவே லாரா பெஸ்ட்டா, சச்சின் பெஸ்ட்டா என்ற கேள்வியும், விவாதமும் தொடர்ந்தபடி உள்ளன.

சமீபத்தில் பான்டிங் இந்த விவாதத்தை மேலும் சூடாக்கி விட்டுப் போனார். இந்த தொடர் விவாதத்தில் தற்போது பாகிஸ்தான் அப்ரிதியும் தலையை விட்டுள்ளார்.

லாராதான் பெஸ்ட்

லாராதான் பெஸ்ட்

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் லாராதான் சிறந்தவர் என்பது எனது கருத்து. அவரைப் போன்ற வீரரை நான்பார்த்ததில்லை.

சச்சின், பான்டிங்கை விட ஒரு படி மேல்

சச்சின், பான்டிங்கை விட ஒரு படி மேல்

சச்சின், ரிக்கி பான்டிங் ஆகியோர் ஜாம்பவான்களாக இருந்தபோதிலும் அவர்களை விட ஒரு படி மேலான நிலையில்தான் இருக்கிறார் லாரா.

அவரை வீழ்த்துவது கஷ்டம்

அவரை வீழ்த்துவது கஷ்டம்

லாராவை வீழ்த்துவது என்பது ரொம்பக் கஷ்டமான காரியம். ஒவ்வொரு விதமான கிரிக்கெட்டிலும் நிபுணத்துவம் பெற்றவர் லாரா. பவுண்டரிகள் அடிப்பதில் அவரை மி்ஞ்ச முடியாது.

ஸ்பின்னர்களை பின்னி எடுப்பார்

ஸ்பின்னர்களை பின்னி எடுப்பார்

குறிப்பாக சுழற்பந்து வீச்சு என்றால் லாராவுக்கு லட்டு சாப்பிடுவது போல. பின்னி எடுத்து விடுவார். அருமையான வீரர். ரசித்துப் பார்க்கலாம் அவரது ஆட்டத்தை.

பவுலர்னா மெக்கிராத், ஆசிப்தான்

பவுலர்னா மெக்கிராத், ஆசிப்தான்

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை கிளன் மெக்கிராத் அருமையான பந்து வீச்சாளர். அதேபோல முகம்மது ஆசிப்பும் நல்ல பந்து வீச்சாளர் என்றார் அப்ரிடி.

Story first published: Tuesday, January 30, 2018, 14:40 [IST]
Other articles published on Jan 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+