சச்சின், லாரா ஆகியோரில் லாராதான் ஒஸ்தி.. சொல்கிறார் பான்டிங்
மெல்போர்ன்: பிரையன் லாரா தனது அணிக்காக நிறைய வெற்றிகளைத் தேடிக்கொடுத்துள்ளார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை விட லாராவே சிறந்தவர் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்.
பான்டிங், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளமுக்கிய வீரர் ஆவார்.
இருப்பினும் சச்சினை உயர்த்திப் பேசாமல் அவ்வப்போது அவரை லேசுபாசாக விமர்சிப்பதுஅவரது ஸ்டைல் ஆகும். இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை சச்சினை அவர் மைல்டாக விமர்சித்துள்ளார்.

சச்சின், லாரா இருவருமே பெஸ்ட்தான்
சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாரா இருவருமே சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இருவரில் லாராதான் உசத்தி
ஆனால் லாரா தனது அணிக்காக நிறைய வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளார். ஆனால் சச்சின் அப்படி அல்ல.

லாரான்னாலே நடுக்கம்தான்
லாரா பேட்டிங் செய்ய வருகிறார் என்று சொன்னாலே எனக்கு நடுக்கம் ஏற்படும். காரணம், அவர் பேட் செய்ய ஆரம்பித்து விட்டால் எங்கு போய் முடிப்பார் என்பதை கணிக்கவே முடியாது.

சச்சினை ஈசியாக மடக்கலாம்
ஆனால் சச்சினைப் பார்த்து நாங்கள் பயந்ததில்லை. அவரை எப்படியாவது மடக்கி விடலாம். ஆனால் லாராவை ஆட்டமிழக்கச் செய்வது ஈசியானதல்ல.

ரசிகர்கள் அர்ச்சனை
ஆனால் லாராவை உயர்த்தியும், சச்சினை மட்டம் தட்டியும் பான்டிங் பேசியிருப்பதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. பான்டிங்கை விமர்சித்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அர்ச்சனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications