கொல்கத்தா ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் புச்சானன் நீக்கம்

ஐபிஎல் 2வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மகா மோசமாக ஆடி படு தோல்வியுடன் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியது.
புச்சானனுக்கும், கங்குலிக்கும் இடையிலான மோதலால், கேப்டன் பதவியை மெக்கல்லத்திடம் கொடுத்தனர். ஆனால் அத்தனை ஆட்டங்களிலும் சொதப்பித் தள்ளியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதனால் கடுப்பான அணியின் உரிமையாளர் ஷாருக் கான், நாடு திரும்பி விட்டார். இனிமேல் அணி ஜெயித்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி வருவேன் என்றும் கூறினார். ஆனால் அவர் சொன்ன பிறகும் கூட தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்தது கொல்கத்தா.
இந்த நிலையில், ஜான் புச்சானனை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டது கொல்கத்தா அணி.
கொல்கத்தா அணியில் புச்சானனின் மகன் மைக்கேல் புச்சானனும் ஒரு பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பொறுப்பு - 'ஸ்டிரென்த் டிரெய்னர்' என்பதாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications