Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை விரட்டியடிப்பாரா விராத் கோஹ்லி?

புலவேயோ: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைதான் இது.

ரிச்சர்ட்ஸ் வசம் உள்ள இந்த சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 425 ரன்கள் தேவைப்படுகிறது.

தொடரும் ரன் மழை

தொடரும் ரன் மழை

தற்போதைய இந்திய அணியில் விராத் கோஹ்லி தொடர்ந்து ரன் மழை பொழிந்து வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து அவர் ரன் குவித்து வருகிறார்.

3வது போட்டியில் மொத்திய கோஹ்லி

3வது போட்டியில் மொத்திய கோஹ்லி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அவர் 68 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தொடரையும் வெல்ல உதவினார்.

கேப்டனாக முதல் தொடர் வெற்றி

கேப்டனாக முதல் தொடர் வெற்றி

ஒரு கேப்டனாக விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ள முதல் ஒரு நாள் தொடர் வெற்றி இது.

ரிச்சர்ட்ஸுக்கு 114

ரிச்சர்ட்ஸுக்கு 114

ரிச்சர்ட்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்களை எடுக்க 114 போட்டிகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது கோஹ்லி 108 போட்டிகளை முடித்துள்ளார்.

5 போட்டிகளில் எட்ட வேண்டும்

5 போட்டிகளில் எட்ட வேண்டும்

அடுத்த ஐந்து போட்டிகளில் அவர் 425 ரன்களை எடுத்தால் சாதனையை முறியடிக்கலாம். 6 போட்டிகளை எடுத்துக் கொண்டால், ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்யலாம்.

இந்தியாவில் கங்குலி

இந்தியாவில் கங்குலி

இந்தியாவின் கங்குலிதான் இதற்கு முன்பு குறுகிய போட்டிகளில் 5000 ரன்கள் குவித்தவராக இருக்கிறார். அவர் 126 போட்டிகளில் இதைச் செய்துள்ளார்.

லாராவையும் முறியடிக்கலாம்

லாராவையும் முறியடிக்கலாம்

அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லாரா, 118 போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்துள்ளார். அந்த சாதனையையும் கோஹ்லி முறியடிக்கலாம்.

விரைவாக சதம் போட்டு ஏற்கனவே சாதனை

விரைவாக சதம் போட்டு ஏற்கனவே சாதனை

ஏற்கனவே விரைவாக 15 ஒருநாள் போட்டி சதங்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 29, 2013, 12:57 [IST]
Other articles published on Jul 29, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+