Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெப்படிங்க டங்கனைப் போய் கேள்வி கேட்க முடியும்.. டோணி கேட்கிறார்!

MS Dhoni
நாக்பூர்: இந்தியாவின் தோல்விக்கு எப்படி பயிற்சியாளர் டங்கன் பிளட்சரை கேள்வி கேட்பது சரியல்ல என்று கேப்டன் டோணி ஒரு தினுசாக கேட்டுள்ளார்.

இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று வருவதற்கு பயிற்சியாளர் டங்கன் பிளட்சின் திறமையின்மையும் காரணம் என்று சர்ச்சை வலுத்து வருகிறது.

கடந்த ஒன்றரை வருடத்தில் பிளட்சரின் பயிற்சியில் இந்தியா வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் பெற்றுள்ளதால் அவரது தலையும் உருட்டப்பட ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், டங்கன் பிளட்சருக்கு ஆதரவாக பேசியுள்ளார் கேப்டன் டோணி. இதுகுறித்து அவர் கூறுகையில், பிளட்சர் தனது தொழில்நுட்ப அறிவை முழுமையாகப் பயன்படுத்தி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரை கேள்வி கேட்க முடியாது. அவர் சிறப்பாகவே செயல்படுகிறார், நாங்களும் சிறப்பாகவே ஆடி வருகிறோம்.

யார் மீதும் பழிபோட்டுத் தப்ப நாங்கள் முயலவில்லை நினைக்கவில்லை. 11 பேரும் எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியமானது.

சில தொடர்களை நாங்கள் வென்றுள்ளோம். சிறப்பான ஆட்டத்தை காட்டியுள்ளோம். இடையில் சில டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் தோற்றுள்ளோம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் தடுமாறினோம். ஆனால் இதை வைத்து ஒட்டுமொத்தமாக அனைத்துமே தவறு என்று சொல்லி விட முடியாது என்றார் டோணி.

Story first published: Thursday, December 13, 2012, 15:53 [IST]
Other articles published on Dec 13, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+