Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது மே.இந்திய தீவுகள் அணி!

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று இப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பர்ஹட், ஜம்ஷெட் களமிறங்கினர். ஆனால் பர்ஹர்ட் 2 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முகமத் 4 ரன்களிலும் சகிப் டக் அவுட்டும் ஆகி பரிதாபமாக நின்றது பாகிஸ்தான். களத்தில் இருந்த ஜம்ஷெட்டுடன் இணைந்த மிஸ்பா நிதானமாக விளையாடினர். மிஸ்பா 96 ரன்களிலும் ஜம்ஷெட் 50 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கெய்ல், ஜார்லஸ் களமிறங்கினர். கெய்ல் 39 ரன்களிலும் ஜார்லஸ் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய பிராவோ 0 ரன்னிலும், சர்வான் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதைத் தொடர்ந்து சாம்வேல்ஸ்-பொல்லார்ட் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி தலா 30 ரன்களை எட்டினர்.40.4வது ஓவரில் 172 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

Story first published: Saturday, June 8, 2013, 11:45 [IST]
Other articles published on Jun 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+