சேப்பலுக்கு கிரிக்கெட் அறிவு கிடையாது-சச்சின்

கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன் சச்சின். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அனேக சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர். இந்நிலையில் சமீபகாலமாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயான் சேப்பல், சச்சினை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னதாக வெளியான கட்டுரையில் சச்சின் சொந்த சாதனைக்காக மட்டுமே விளையாடுவார். அவர் இந்திய அணிக்கு சுமையாகிவிட்டார் என எழுதியிருந்தார்.
இதற்கு சச்சின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்,
சிலர் அடுத்தவர்களை குறை கூறி பிரபலமாக வேண்டும் நினைப்பார்கள். இயான் சேப்பலுக்கு கிரிக்கெட் அறிவு சுத்தமாக கிடையாது.
நான் எனது 16 வயதில் கிரிக்கெட் வாழக்கையை ஆரம்பித்தேன். அப்போது அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பேட் செய்தேன்.பின்னர் 26 வயதில் எனது பேட்டிங்கில் சிறிது மாற்றம் செய்தேன். தற்போது 36 வயதாகிவிட்ட நிலையில் அணியின் தேவைக்கேற்ப விளையாடி வருகிறேன் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications