ஐபிஎல் சென்னை அணி அறிவிப்பு

ஐபிஎல் 20-20 போட்டித் தொடர் வருகிற 18ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது. ஜூன் 1ம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.
இதில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திர சிங் டோணி ஏற்கனவே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிைலயில், அணி விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை அணி மொஹாலியில் நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் 19ம் தேதி மோதுகிறது.
17 பேர் கொண்ட சென்னை அணியினர் இன்று மொஹாலி புறப்பட்டுச் செல்கின்றனர்.
சென்னை அணி விவரம்:
எம்.எஸ்.டோணி (கேப்டன்), மாத்யூ ஹைடன், ஸ்டீபன் பிளமிங், ஜேக்கப் ஓரம், முத்தையா முரளீதரன், மைக் ஹூசே, சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத், பார்த்திவ் படேல், ஜோகிந்தர் சர்மா, வித்யூத் சிவராமகிருஷ்ணன், அனிருத்தா, ஆர்.அஸ்வின், ஜகதி, அமர்நாத், அருண் கார்த்திக், பன்ப்ரீத் கோனி.
முதலில் அணியில் சேர்க்கப்படுவதாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி அணியில் இடம் பெறவில்லை. உடல் தகுதியில் அவர் தேறாததால் அணியில் பாலாஜி இடம் பெறவில்லை. மேலும், தென் ஆப்பிரிக்க வீரர்கள் மெக்காயா டினி, மார்க்கல் ஆகியோர் வேறு போட்டிகளில் விளையாடவிருப்பதால் இடம் பெறவில்லை. இருப்பினும் இருவரும் 26ம் தேதி அணியில் சேர்ந்து கொள்வார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications