உடனே ஐபிஎல்லை இழுத்து மூடுங்கள்... கிர்மானி ஆவேசம்

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சிக்கி கைதாகியிருப்பது குறித்து கிர்மானி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். அவர்களுக்கு 12 முதல் 15 வருட கால சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்.
ஐபிஎல்லையும் உடனே இழுத்து மூட வேண்டும். ஐபிஎல்லில் பெரும் பணம் விளையாடுவதால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.
கடந்த ஆண்டும் கூட சில வீரர்கள் ஐபிஎல்லில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக சிக்கினர். எனவே இந்த விஷயம் தற்போது சீரியஸாகியுள்ளது, தொடர் கதையாகியுள்ளது. ஐபிஎல்லால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதை விட சீரழிவுக்கே வித்திடுகிறது என்பதே உண்மை என்றார் அவர்.
Story first published: Thursday, May 16, 2013, 11:23 [IST]
Other articles published on May 16, 2013


Click it and Unblock the Notifications