மாரடோனா பாதி.. பீலே மீதி, இரண்டும் கலந்த கலவைதான் சச்சின்- ஆலன் டொனால்ட்
டெல்லி: கால்பந்துக்கு பீலேவும், மாரடோனாவும் மேதைகளாக இருக்கிறார்கள். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் இணைந்த கலவையாக சச்சின் இருக்கிறார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரைப் புகழும் கிரிக்கெட் பிரபலங்களின் வரிசையில் ஆலன் டொனால்டும் இணைந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடும் வரைதான் கிரிக்கெட் உயிர்ப்புடன இருக்கும். அவர் போய் விட்டால் கிரிக்கெட் ஏழையாகி விடும் என்று பேசியுள்ளார் டொனால்ட்.

சச்சின் போனால் எல்லாம் போச்சு
சச்சின் ஒரு அழகான ஆட்டக்காரர். அவர் இல்லாவிட்டால் கிரிக்கெட் இல்லை. இது உண்மைதான்.

மாரடோனா பாதி .. பீலே மீதி
எப்படி கால்பந்துக்கு மாரடோனா, பீலே உள்ளனரோ அதுபோல கிரிக்கெட்டில் சச்சின். இன்னும் சொல்வதாக இருந்தால் பீலே, மாரடோனா இருவரும் இணைந்த கலவைதான் சச்சின்.

சச்சின் தொடர்ந்து ஆட வேண்டும்
சச்சின் தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும். அவர் மிகச் சிறந்த வீரர். அசாதாரணமானவர். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால் கிரிக்கெட் ஏழ்மையில் மூழ்கிப் போகும்.

கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்
கிரிக்கெட் என்றதுமே எனக்கு முதலில் சச்சின்தான் நினைவுக்கு வருவார். மாபெரும் கிரிக்கெட் வீரர் யார் என்றால் அப்போதும் சச்சின்தான் நினைவுக்கு வருகிறார்.

எப்போதுமே அவர்தான் நம்பர் ஒன்
என்னைப் பொறுத்தவரை எப்போதுமே சச்சின்தான் நம்பர் ஒன். அந்தக் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை.

மாதக் கணக்கில் திட்டமிடுவோம்
சச்சினை அவுட் செய்ய போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு திட்டமிடக் கூடாது. அது வேலைக்கு ஆகாது. நாங்கள் மாதக் கணக்கில் சச்சின் குறித்து ஆய்வு செய்து அவரை அவுட் ஆக்க தீவிரமாக யோசிப்போம் என்றார் டொனால்ட்


Click it and Unblock the Notifications