Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரம்-சுருண்டது டெல்லி

மும்பை: ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது. மும்பையில் நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி அபாரமாக வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.

முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஸ்மித்தும், அஸ்னூத்கரும் வழக்கம் போல சிறப்பாக ஆடினர். ஸ்மித் 21 பந்துகளில் 25 ரன்களைச் சேர்த்தார். அஸ்னூத்கர், டெல்லி பந்து வீச்சை தவிடுபொடியாக்கி 21 பந்துகளில் 39 ரன்களைக் குவித்தார்.

ஆனால் ஷான் வாட்சன்தான் கலக்கி விட்டார். 29 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 52 ரன்களைக் குதித்து ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை வேகப்படுத்தினார். அவரது ஸ்கோரில் 3 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

அதேபோல யூசுப் பதானும் விளாசித் தள்ளினார். 21 பந்துகளில் 45 ரன்களை அவர் குவித்தார்.

இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான்.

டெல்லி தரப்பில் மஹரூப் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை சாய்த்தார். யோ மகேஷ், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து களம் இறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. கம்பீர் 11, ஷேவாக் 3, தவான் 5, திவாரி 0 என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே டெல்லிக்குப் பொறி கலங்கியது.

தில்ஷன் மற்றும் சற்றே நிலைத்து ஆடி 33 ரன்களைச் சேர்த்தார். திணேஷ் கார்த்திக் அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில், 16.1 ஓவர்களிலேயே டெல்லியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 87 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வியைத் தழுவியது டெல்லி.

ராஜஸ்தான் அணியின் சார்பில் வாட்சன், முனாப் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து டெல்லியை நிலை குலைய வைத்தனர். கேப்டன் ஷான் வார்னே 2 விக்கெட்களை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இன்று சென்னை-பஞ்சாப் மோதல்:

இந்த நிலையில் இன்று இரண்டாவது அரை இறுதி ஆட்டம் மும்பையில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+