Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடால், போல்ட்டை விட டோணி பெரிய சம்பாத்தியக்காரராம்...!

டெல்லி: ரபேல் நடால், உசேன் போல்ட்டை விட நம்ம ஊர் டோணிதான் உலகிலேயே அதிக அளவில் ஊதியம் ஈட்டும் விளையாட்டு வீரராம். போர்ப்ஸ் பட்டியல் இதைச் சொல்கிறது.

உலகிலேயே அதிக அளவில் சம்பாத்தியம் பண்ணும் வீரர்கள் குறித்த பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு முன்னால் இருக்கிறார் டோணி.

உலக வரிசையில்16வது இடம் டோணிக்கு

உலக வரிசையில்16வது இடம் டோணிக்கு

போர்ப்ஸ் பட்டியலில் டோணிக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. இவரது வருட வருமானம் சராசரியாக ரூ. 180 கோடியாம்.

முன்னணி வீரர்களுக்கு முன்னால்

முன்னணி வீரர்களுக்கு முன்னால்

எப்ஒன் வீரர் பெர்னாண்டோ அலோன்சோ, லூயிஸ் ஹாமில்டன், நோவாக் ஜோகோவிக், ரபேல் நடால், உசேன் போல்ட் ஆகியோருக்கு முன்னால் இருக்கிறார் டோணி.

நடாலுக்கு 30வது இடம்

நடாலுக்கு 30வது இடம்

பிரபல டென்னிஸ் வீரர் நடால் 30வது இடத்தில் இருக்கிறார்.

போல்ட்டுக்கு 40

போல்ட்டுக்கு 40

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீரரும், உலகின் அதி வேக ஓட்டக்காரருமான உசேன் போல்ட் 40வது இடத்தில் இருக்கிறார். இவர் டோணியின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதை வச்சு இந்தக் கணக்கு...

எதை வச்சு இந்தக் கணக்கு...

பெறும் ஊதியம், போனஸ்கள், பரிசுப் பணம், விளம்பர வருவாய் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஊதியக் கணக்கைப் போட்டுள்ளது போர்ப்ஸ்.

கடந்த வருடம் 31வது ரேங்க்

கடந்த வருடம் 31வது ரேங்க்

டோணி கடந்த வரும் 31வது ரேங்க்கில் இருந்தார். தற்போது 15 ரேங்க் முன்னேறியுள்ளார்.

31வது இடத்தில் சச்சின்

31வது இடத்தில் சச்சின்

சச்சின் டெண்டுல்கர் 31வது இடத்தில் இருக்கிறார். இவரது வருட வருமானம் சராசரியாக ரூ. 125 கோடியாம்.

இருவர் மட்டுமே இந்தியர்கள்

இருவர் மட்டுமே இந்தியர்கள்

இந்த இருவர் மட்டுமே போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் ஆவர்.

உட்ஸ்தான் டாப்

உட்ஸ்தான் டாப்

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது வருமானம் 78.1 மில்லியன் டாலராகும்.

பெடரருக்கு 2வது இடம்

பெடரருக்கு 2வது இடம்

டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரர் 71.5 மில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் பிரிவில் ஷரோபாவா டாப்

மகளிர் பிரிவில் ஷரோபாவா டாப்

மகளிர் பிரிவில் ரஷ்யாவின் டென்னிஸ் தாரகை மரியா ஷரபோவா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2வது இடத்தில் செரீனா

2வது இடத்தில் செரீனா

இன்னொரு டென்னிஸ் புயலான செரீனா வில்லியம்ஸ் 2வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Tuesday, August 20, 2013, 11:12 [IST]
Other articles published on Aug 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+