3வது போட்டி-இந்தியா வெற்றி-கை கொடுத்த டோணி

இந்திய, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன.
இந்த நிலையில் 3வது ஒரு நாள் போட்டி கிராஸ் தீவில் நடந்தது. இந்தப் போட்டியில் டோணி பொறுப்பாக ஆடி அணியை வெற்றிக் கரை சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 46 ரன்களை எடுத்தார் டோணி. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இரு அணிகளும் தலா 27 ஓவர்களில் விளையாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ் வென்ற இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகளை பேட் செய்யப் பணித்தது. சர்வானின் அதிரடி ஆட்டத்தால் (62 ரன்கள்) மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இந்தியா விளையாடத் தொடங்கியபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து வெற்றிக்கான டார்கெட் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 195 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
திணேஷ் கார்த்திக் நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒரு சிறப்பான விளையாட்டைக் காட்டினார். அவரும் கெளதம் கம்பீரும் இணைந்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைக கொடுத்தனர்.
கார்த்திக் 47 ரன்களும், கம்பீர் 44 ரன்களும் எடுத்தனர். டோணி 34 பந்துகளில் 46 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் மறுபடியும் மழை குறுக்கிட்டதால் இந்தியா 22 ஓவ்ரகளில் 159 ரன்கள் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த இலக்கை ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் எட்டி வெற்றி பெற்றது இந்தியா.
இந்தியாவின் சார்பில் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். டோணி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications